Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாமாவீரன் இசை வெளியிட்டு விழா எப்போது?

மாவீரன் இசை வெளியிட்டு விழா எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் .

- Advertisement -

இந்த திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. மேலும் அரசியலை நகைச்சுவையாகவும் காட்டிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மிக சாதாரணமாக நேரடியாக விஜய் டிவியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் அதற்குப் பின்பு நெட்பிளிக்ஸ் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்கப்பட்டது.

பொதுவாக இதுபோன்று தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பு பெறுவது கிடையாது.

- Advertisement -

ஆனால் இந்தத் திரைப்படம் இப்படி ஒரு வரவேற்பை பெறுவதற்கு இத்திரைப்படத்தின் கதை களம் தான் முழு காரணமாகும். அனுபவம் இல்லாத இளம் இயக்குனராக இருந்தாலும் திரைப்படத்தை நல்ல முறையில் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனுடைய காரணத்தினால் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மாவீரன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கதாநாயகியாக விருமன் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்த இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். மேலும் இதில் யோகி பாபு மிஸ்கின் சரிதா சுனில் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் உடைய இசை வெளியிட்டு விழா வருகின்ற ஜூலை இரண்டாம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு தளபதி விஜய் நடித்த சர்க்கார்,பிரின்ஸ் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவும் இது சாய்ராம் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கத்தில் தான் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்த வரவேற்பை போல் இந்த திரைப்படத்திற்கும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூலை 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular