Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாசிவகார்த்திகேயன் பிறந்த நாள் ஸ்பெஷல்..! மாவீரன் படக்குழுவின் டிரிட்

சிவகார்த்திகேயன் பிறந்த நாள் ஸ்பெஷல்..! மாவீரன் படக்குழுவின் டிரிட்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த டான், டாக்டர் ஆகிய திரைப்படங்கள் பெரிய ஹிட் ஆன நிலையில் பிரிண்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது வித்தியாசமான ஒரு கதை களத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினியின் 1986 ஆம் ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படத்தை பெயரை தற்போது சிவகார்த்திகேயன் மீண்டும் பயன்படுத்துகிறார்.

மேலும் தளபதி படத்தில் ரஜினி   போல் அதே தோற்றத்தை சிவகார்த்திகேயனும் காப்பி அடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிவரும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்கும் விதமாக மாவீரன் பட குழு ஒரு காரியத்தை செய்ய உள்ளது.

- Advertisement -

அதன்படி மாவீரன் படத்தில் முதல் பாடலை அன்று ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் மற்றும் இசையமைப்பாளர் பரத் சங்கர் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் பரத் சங்கர் சிவகார்த்திகேயனுக்காக ஒரு மாசான குத்துப் பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடல் 17ஆம் தேதி ரிலீசாகிறது.
மாவீரன் தெலுங்கு படம் மகாவீரோடு என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில்புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுனில் நடிக்கிறார்.

- Advertisement -

மிஸ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் மாவீரனில் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு வந்து பதினொரு ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக இந்த பாடலும் பாடலும் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Most Popular