தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாக கதை திருட்டு என்பது மிகப்பெரிய அளவிலான பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் என்றால் அது முருகதாஸ் தான். ஏனென்றால் அவர் இயக்கி எடுத்த ஒவ்வொரு படத்திலும் இந்த பிரச்சனை இருந்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அண்மையில் நடித்த மாவீரன் திரைப்படத்திற்கும் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மாவீரன் திரைப்படத்தில் கதை கரு தன்னுடையது என்றும் அதனை மடோன் அஸ்வின் ஏமாற்றி எடுத்து விட்டதாகவும் தமிழ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாவீரன் படத்தின் கதைக்காக சுமார் ஏழு ஆண்டுகளாக தான் உழைத்ததாக கூறியுள்ளார். கட்டிடம் இடிந்து விழுவதுதான் கதை கரு என்றும் இதனை இயக்குனர் அஸ்வின் திருடிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியும் தான் வரைந்து வைத்திருந்ததாகவும் தற்போது அதனை மடோன் அஸ்வின் எடுத்து விட்டதாகவும் தமிழ் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான பட்ஜெட் எவ்வளவு செலவாகும், இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி,ஸ்டோரி போர்டு என என்னென்ன தேவைப்படுமோ அனைத்தையும் டிஜிட்டல் முறையிலும் தாம் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக இந்த படத்தின் கதையை தான் ஜெயிடம் தான் கூறினேன் என்று தமிழ் தெரிவித்தார். ஜெய் தனது மேலாளர் பார்த்து பேசுங்கள் என்று கூறினார். இந்த கதை அவரிடம் ஒரு மாதம் வரை இருந்தது.
ஆனால் மேலாளரை என்னால் சந்திக்க முடியவில்லை. பிறகு அந்த கதையை கொண்டு போய் நடிகர் சந்தானம் இடம் கொடுத்தேன். நடிகர் சந்தானத்திற்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர் அடுத்தடுத்து மூன்று படங்கள் இருப்பதால் என்னை காத்திருக்க சொன்னார்.
இந்த கதைக்காக 2017 ஆம் ஆண்டு முதல் தாம் உழைத்து வருகின்றேன். ஏழு ஆண்டுகளாக உழைத்த தமக்கு மாவீரன் பட குழு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தான் கேட்டுக்கொள்கிறேன் வெளியிட்டுள்ளார்.