மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தின் தெலுங்கு ரீமேக் சரியான எதிர்பார்ப்பை பெறாததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாரி செல்வராஜின் 3வது படம்
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ்.
முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.
எதிர்பார்ப்பை எகிற வைத்த மாமன்னன்
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது. சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது.
தெலுங்கில் வரவேற்பை பெறாத படம்
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிய உள்ள நிலையில், படத்தின் விறுவிறு காட்சி அமைப்பும், கதையமைப்பும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் மாமன்னன் இந்தாண்டின் முக்கிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், தெலுங்கில் நாயகடு என்னும் பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசானது. ஆனால் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த பேபி திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் தெலுங்கு படைப்பான மாவீரடு ரிலீஸ் ஆனதால், நாயகடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்தது. அது மட்டுமின்றி மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஓடிடி வெளியாக இருப்பதும், திரையரங்குகளில் கூட்டம் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.