சினிமா

“ ரோஹித் சர்மாவை என் புகைப்படம் வைத்து கலாய்க்கிறார்கள். அதை… ” – மீம்ஸ்களுக்கு பதில் கொடுத்துள்ள மிர்ச்சி சிவா.. !

Rohit Sharma Mirchi Siva

சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அத்துறையில் நடக்கும் நிகழ்வுகளை மீம்ஸ்களாக பதிவிட்டு இணையத்தை நிரப்புவது நெட்டிசன்களின் தினசரி வேலை. பல பிரபலங்கள் அவர்களை கலாய்த்து போடும் மீம்ஸ்களை ரசிக்கின்றனர், இது நவீன உலகில் சாதாரணமாகிவிட்டது.

ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு தலைப்பு டிரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி சமீபத்தில் ட்ரெண்ட் ஆன ஒன்று, ரோஹித் ஷர்மா – மிர்ச்சி சிவா மீம்ஸ்கள். பார்பதற்கும் உடலமைப்பும் ஒரே மாதிரி இருப்பதால் ஒப்பிட்டு களாய்கின்றனர். அதே போல் இது ஏற்கனவே பல முறை வைரலாகி இருக்கிறது. சொல்லப்போனால் இது மிகவும் பழையது.

Advertisement

அண்மையில் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சினிமா பிரபலங்களுக்கான கிரிக்கெட் லீக்கும் நடைபெற்றது. எப்போதும் கோலிவுட் அணிக்காக ஜீவா, சிவா, ஆர்யா ஆடுவார்கள். அதே போல் இந்த முறை மிர்ச்சி சிவா களமிறங்கி பந்துவீசியதை ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டு கலாய்தனர்.

இந்த ஒப்பீடு புதிதல்ல. இருப்பினும் ஒரே சமயத்தில் இருவரும் கிரிக்கெட் விளையாடியதை மையமாக்கி நெட்டிசன்கள், ‘ எது ரோஹித் என்றே தெரியவில்லை ” , “ யோவ் ரோஹித் ஷர்மா நீ என்னய இங்க விளையாடிட்டு இருக்க ” என சரமியாக பதுவிட்டுத் தள்ளினர்.

Advertisement

மிர்ச்சி சிவா பேச்சு

சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் நடித்துள்ள ‘ சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் ’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் மிர்ச்சி சிவா இதைப் பற்றி பேசினார். அவர் கூய்யதாவது, “ நான் அவராக முடியாது அவர் நானாக முடியாது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்களை இணையத்தில் பதிவிடுகின்றனர். என்னால் அவரைப் போல கிரிக்கெட் ஆட முடியாது. அவரால் என்னைப் போல நடனமாட முடியாது. ” என நகைச்சுவையாக பேசினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top