Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாநல்ல விமர்சனங்களை பெற்ற மிஷன் சாப்டர் ஒன்..எந்த ஓடிட்டியில் எப்பொழுது ரிலீஸ் ஆகிறது?

நல்ல விமர்சனங்களை பெற்ற மிஷன் சாப்டர் ஒன்..எந்த ஓடிட்டியில் எப்பொழுது ரிலீஸ் ஆகிறது?

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனது ஏ. எல் விஜய் இயக்கத்தில் மிஷின் சாப்டர் 1 என்ற திரைப்படம் கடந்த பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

கடந்த பொங்கல் அன்று கேப்டன் மில்லர், அயலான் போன்ற திரைப்படங்களுடன் மிஷன் சாப்டர் 1என்ற இந்த திரைப்படமும் மோதியது. தனுஷ் நடித்த கேப்டன் மிலன் திரைப்படத்திற்கும் ,சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்திற்கும் ப்ரோமோஷன்களும் ,விளம்பரங்களும் அதிகம் இருந்தது .அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருந்தது

ஆனால் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 என்று திரைப்படம் இந்த திரைப்படங்களின் அளவிற்கு பிரமோஷன் எதுவும் இன்றி திரை அரங்கில் வெளிவந்து எதிர்பாராத அளவிற்கு நல்ல வெற்றியை பெற்றது.

- Advertisement -

நடிகர் அஜித் கூறியது போல நல்ல திரைப்படத்திற்கு பிரமோஷன் தேவை இல்லை என்பதை மெஷின் சாப்டர் 1 திரைப்படம் நிரூபித்திருக்கிறது.

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படத்தையும், அயலானையும் வெளியிடும் அந்நாளில் சூப்பர் ஸ்டார் நடித்த லால்சலாம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர்கள் தயங்கினார்கள். ஆனால் இவர்களுடன் போட்டி போட மிஷன் சாப்டர் 1 திரைப்படம் களமிறங்கியது கெத்தான ஒரு செயல் தான்.

திரையரங்கில் வெளியிடுவதற்கு யோசிக்காத பட குழுவினர்கள் இதை ஓ டி டி யில் வெளியிடுவதற்கு சற்று தாமதப்படுத்தி இருக்கிறார்கள். நேற்று சன் நெக்ஸ்ட் அயலான் திரைப்படமும், அமேசான் பிரைமில் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் ஒன்றாக வெளிவந்த இந்த திரைப்படங்கள் ஒன்றாக வெளி வந்தால் அந்த அளவிற்கு ஆடியன்ஸ் சப்போர்ட் இருக்காது என்று கருதியதால் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தை வருகின்ற 16ஆம் தேதி நெட்லிக்ஸ் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.

விமர்சன ரீதியாக நல்ல பெயரை எடுத்திருந்தாலும் ஓடி டியில் வெளியிடுவதற்கு தற்பொழுது எடுத்திருக்கும் இந்த முடிவு தான் சரி என்பதை ரசிகர்களின் கருத்தாகும். சோலோவாக வருகின்ற வாரம மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் netflix களமிறங்க இருக்கிறது .

அந்த வாரத்தில் வேறு எந்த திரைப்படங்களும் வெளியிடப்படாததால் நிச்சயம் ஓடிடியில்  இதற்கு நல்ல ரீச் இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.

Most Popular