Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாஇது லிஸ்டிலே இல்லையே.. ரஜினியுடன் இணையும் மோகன் லால்

இது லிஸ்டிலே இல்லையே.. ரஜினியுடன் இணையும் மோகன் லால்

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு பெரிய பரபரப்பான செய்தி திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினியும் மலையாள சினிமாவின் உச்ச நடிகரான மோகனாலும் இணைந்து ஒரு படத்தின் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி, மம்முட்டி உடன் நடித்திருக்கிறார். தற்போது மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது என்ன படத்திற்கு என்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படத்திற்கு தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் நெல்சன் பேசி இருக்கிறார். இதற்கு மோகன் லாலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் ,அடுத்த வாரம் சென்னையில் படபிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அப்போது அந்த வாய்ப்பை மோகன்லால் நிராகரித்தார். தற்போது ரஜினியுடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மோகன்லால் நடிகர் விஜயுடன் ஜில்லா சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த வரிசையில் ரஜினியுடன் அவர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்லர் படத்தில் மோகன் லாலும் இடம்பெற்று இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

காலத்தால் அழியாத இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே காட்சியில் இடம் பெற்றால் திரையரங்குகள் என்ன கதிக்கு தான் ஆகப்போகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மோகன் லாலின் கேரக்டர் எந்த அளவிற்கு படத்தில் வரும். இல்லை இது சிறப்பு தோற்றமா?  ரஜினியுடன்  இணைந்து காட்சியில் வருவாரா, இல்லை தனித்தனியாக வருவார்களா? ரஜினிக்கு வில்லனா, இல்லை மோகன்லால் நண்பனாக வருகிறாரா போன்ற எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.

Most Popular