Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஇதுதாம்பா என்னோட ரோல்...- ஜெயிலர் படத்தில்  கேமியோ ரோலில் கலக்க இருக்கும் மோகன்லால் பளீச்!

இதுதாம்பா என்னோட ரோல்…- ஜெயிலர் படத்தில்  கேமியோ ரோலில் கலக்க இருக்கும் மோகன்லால் பளீச்!

ஜெய்லர் படம் வெளிவருவதில் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மலையாள நடிகரான மோகன்லால் தன் மௌனம் கலைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் ,ஜெய்லர் படம் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டிக்கொண்டே இருக்கிறது.

- Advertisement -

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் தற்பொழுது அனைவரது வாய்களிலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது..
ஜூலை 28 நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரும் ஆரவாரத்தை பலருக்கும் ,ஆறாத வார்த்தைகளை சிலருக்கும் கொடுத்தது.

அந்த நிகழ்ச்சியின் போது, அதில் நடித்த அனைத்து நடிகர்களும் விழாவில் பங்கேற்றனர். ஆனால் மலையாள நடிகரான மோகன்லால்  பங்கேற்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.நகைச்சுவை நடிகர் மணிவண்ணன் ஒரு படத்தில் ஒவ்வொரு ஸ்டேட் மொழியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்தந்த ஸ்டேட் பெண்களை காதலிக்க வேண்டும் !!என்று நகைச்சுவையாக சொல்லி இருப்பார்.

அதைப்போல் ஒவ்வொரு ஸ்டேட் மக்களையும் தன் பக்கம் ஈர்க்க விரும்பிய இயக்குனர் நெல்சன், அந்தந்த மாநிலங்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகர்களை தன் ஜெய்லர் படத்தில் இணைத்து மற்றொரு பாரத விலாசாகவே மாற்றியுள்ளார்.

- Advertisement -

கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால் ,தெலுங்கில் இருந்து ஜெகபதி பாபு, ஹிந்தியில் இருந்து ஜாக்கிசரஃப் ,என்று சும்மா அலற விட்டிருக்கிறார்.

- Advertisement -

அதிலும் மோகன்லால் ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் மனதை தன் நடிப்பால் கொள்ளை அடித்தவர்.
மணிரத்தினத்தின் இருவர் படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை தன் நடிப்பால் நம் கண் முன்னே கொண்டு வந்தார். கமலின் உனக்குள் ஒருவன் படத்தில் போலீசாக அவர் துப்பறியும் காட்சிகள் தூள் பறக்கும்.

தளபதி விஜய் உடன் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸு டா !! என்று அதகளம் செய்திருப்பார். கம்ப்ளீட் நடிகர் என்று ரசிகர்களால் போற்றப்படும் மோகன்லால் ஜெய்லர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பது கூடுதல் பலமாக கருதப் படுகிறது.

அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், தற்போது மோகன்லாலே பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜெயிலர் படத்தில் தன் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் ,!அதே சமயத்தில் யாராலும் எளிதில் மறக்க முடியாத காட்சிகளாகவும் இருக்கும் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார்.

இதில் அவருக்கு சண்டைக் காட்சிகளும்  சிறப்பாக அமைந்திருக்கிறது என்று தகவல்கள் கசிந்துள்ளன.
சண்டைக் காட்சிகள் உள்ளதென்றால் ரஜினிக்கு வில்லனாக இருப்பாரோ?? என்ற கேள்வியுடன், என்ட குருவாயூரப்பா!! என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் கலக்க இருக்கும் மோகன்லாலின் கதாபாத்திரத்தின் பெயர் மேத்யூ என்றும் சொல்லப்படுகிறது..
மார்க் ஆண்டனி போல் மேத்யூ, மக்கள் மனதில் முத்திரை பதிப்பாரா?? பொறுத்திருந்து பார்ப் போம்…

Most Popular