Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவுக்கு தான் கூடுதல் தியேட்டர்கள்.. 3 ஏரியாவில் ரெட் ஜெய்ண்ட்ஸ் ஆதிக்கம்

துணிவுக்கு தான் கூடுதல் தியேட்டர்கள்.. 3 ஏரியாவில் ரெட் ஜெய்ண்ட்ஸ் ஆதிக்கம்

- Advertisement -

தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு, வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இரண்டு படத்திற்கும் சரி சமமான அளவில் திரையரங்குகள் பிரித்து வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், துணிவு திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகளும், கூடுதல் திரையரங்குகளும் கிடைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக திருச்சி, சேலம் ,மதுரை போன்ற விநியோகஸ்தரர்கள் பகுதிகளில் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் மையப் பகுதியாக கருதப்படும் திருச்சியில் பெரிய திரை அரங்காக உள்ள எல் ஏ சினிமாஸ் மாரிஸ் மற்றும் எல் ஏ சோனா ஆகிய திரையரங்குகளில் உள்ள பெரிய  ஸ்கிரீன் துணிவுக்கு தான் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

மேலும் திருச்சியில் உள்ள பிரபல திரையரங்குகள் ஆன மெகா ஸ்டார், காவேரி, வெங்கடேஷ் ஆகிய திரையரங்குகளில் துணிவு திரைப்படம் தான் போடப்படுகிறது. ஆனால் வாரிசு திரைப்படத்திற்கு பழைய திரையரங்கான ஸ்டார் மற்றும் ரம்பா திருச்சிக்கு வெளியே உள்ள பெலக் சினிமா  ஆகியவைதான் கிடைத்துள்ளது. அதே போன்று கும்பகோணத்தில் துணிவு திரைப்படம் காசி, பரணிக்கா, விஜயா போன்ற பெரிய திரையரங்குகள் கிடைத்துள்ளது.  வாரிசு திரைப்படம் வாசு,  எம் எஸ் எம் சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. திருவாரூரில் தைலம்மையில் உள்ள 2 ஸ்கிரின்களும், நடேஷ் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆக, சோழா மற்றும் தைலம்மையில் உள்ள ஒரு ஸ்கிரின் வாரிசுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

இதேபோன்று ஒவ்வொரு ஊர்களிலும் துணிவு திரைப்படத்திற்கு பெரிய திரையரங்குகள் மற்றும் கூடுதல் காட்சிகள் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தமிழகத்தை பொறுத்தவரை முதல் நாள் வசூல் துணிவு திரைப்படத்திற்கு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக அளவில் வாரிசு திரைப்படத்திற்கு முன்பதிவு அமோகமாக நடைபெறுவதால் ஒட்டு மொத்த வசூலில் வாரிசு ஆதிக்கம் செலுத்தலாம். தமிழகத்தை பொறுத்தவரை எந்தப் படம் நல்ல விமர்சனத்தை பெறுகிறதோ அந்தப் படம் அதிக வசூலை பெறும் என்று திரை விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Most Popular