தமிழ் சினிமாவில் விறு விறு என்று வளர்ந்து வந்து இருந்த இடம் தெரியாமல் போன நடிகர்களும் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவராவார்.
ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதம், மனசெல்லாம் , வர்ணஜாலம், பார்த்திபன் கனவு, ஜூட் ,கனா கண்டேன் ,போஸ் என்று நிறைய திரைப்படங்களை நடித்துக் கொண்டிருந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் என்று சொல்வோம் அளவிற்கு எதுவும் இல்லை.
ஆனால் அவர் நடித்த நண்பன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்வில் மீண்டும் அவரை தலைதூக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார் .ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவுமே வெளியானது கூட தெரியாத அளவிற்கு அவல நிலை அடைந்தது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த் அவர் நடிக்க இருந்து அவர் வேண்டாம் என்று ஒதுக்கி பின் பிற ஹீரோக்கள் நடித்து ஹிட்டான திரைப்படங்கள் நிறைய இருக்கிறது என்று ஒரு பட்டியலிட்டு இருக்கிறார்.
நடிகர் ஷாம் நடித்த 12b திரைப்படம், மாதவன் நடித்த ரன் ,திரைப்படம் மணிரத்தினம் இயக்கிய மாதவன், சூர்யா, சித்தார்த் போன்ற நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்த ஆயுத எழுத்து திரைப்படம் போன்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க இருந்து அவர் வேண்டாம் என்று ஒதுக்கி இருப்பதாக கூறி இருக்கிறார் ஆனால் இந்த திரைப்படங்கள் எல்லாம் அவர் நடித்திருந்தால் அவர் சினிமா வாழ்வில் நல்ல பெயரை பெற்று இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
அதேபோல் ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்தையும் நான்தான் நடிக்க இருந்தேன் என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார் .அதேபோல் எனக்காகவே தெலுங்கு சினிமாவில் எம் குமரன் மகாலட்சுமி திரைப்படம் எழுதப்பட்டது கடைசியில் எனக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆனது என்று தான் சினிமாவில் நலுவ விட்டு திரைப்படங்களைப் பற்றி கூறியிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.