Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாஅப்டேட்னா இது அப்டேட்.. ! துருவ நட்சத்திரம் படத்தைப் பற்றி ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ள ...

அப்டேட்னா இது அப்டேட்.. ! துருவ நட்சத்திரம் படத்தைப் பற்றி ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ள லேட்டஸ்ட் தரமான அறிவிப்பு.. !

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பாதியிலேயே தத்தளிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம், ரித்து வர்மா, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் ஆகிய முன்னனி நடிகர்கள் கொண்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வந்து ஏறத்ததாழ 9 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் வரவில்லை.

- Advertisement -

இணையத்தில் நெட்டிசன்கள் “ பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆகும் என்றனர். நான் பள்ளி & கல்லூரி முடித்துவிட்டு வேலை இல்லாமல் வெட்டியாக இருந்து தற்போது பணிக்குக்கே சென்றுவிட்டேன். இன்னும் வெளியாகவில்லை இந்தப் படம். ” என கலாய்த்து தல்லுகின்றனர். இதுவரை படத்தின் டிரெய்லர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ ஒரு மனம் ’ என்ற பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டு மத்தியில் கூட டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றனர் ஆனால் எதுவும் பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் கௌதம் வாசுதேவ் மேனனின் பொருளாதார சிக்கல் தான். துருவ நட்சத்திரத்துடன் இவருடைய ‘ என்னை நோக்கிப் பாயும் தோட்டா ’ படமும் இதே ரீலீஸ் பிரச்சினையை தான் சந்தித்தது. வேல்ஸ் நிறுவனத்தின் உதவியால் அப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகிவிட்டது. விக்ரமின் இந்தப் படம் தான் பல ஆண்டுகள் வெயிட்டிங்.

- Advertisement -

அண்மையில் பல சினிமா விமர்சகர்கள் விரைவில் துருவ நட்சத்திரத்தை நான் திரையரங்கில் காணப் போகிறோம் என் அவர்கது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இம்முறை அது நிஜமாக காத்திருக்கிறது. படத்தின் இறுதிகட்ட பணிகளில் கௌதம் மேனன் & கோ பிஸியாக பணியாற்றி வருகிறது. மறுபக்கம் படத்தின் முக்கிய டெக்னீசியனான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.

- Advertisement -

தன் சமூக வலைதள பக்கத்தில், “ இயக்குனர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசைக்காக டால்பி 9.1.4ல் பணியாற்றி வருகிறேன். விரைவில் உங்களை திரையரங்கில் கான்கிறேன். ” எனப் பதிவிட்டிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பதிவு ரீலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையை சற்று ஊட்டியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என்றாலே குவாலிட்டி தான். இம்முறை டால்பி 9.1.4 என்பதால் பி.ஜி.எம்லாம் திரையரங்கில் தெறிக்கும்.

Most Popular