சினிமா

நல்ல சட்டை ,தாடியை எல்லாம் சரி பண்ணிட்டு வாங்க விஜய்.. ஜேம்ஸ் வசந்த் அறிவுரை

நடிகர் விஜய் பங்கேற்ற வாரிசு இசைப்பட விழா நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஜய் எப்போதுமே பொது நிகழ்ச்சிக்கு வரும்போது சாதாரண ஆடை மற்றும் எந்த ஒரு ஒப்பனையும் செய்யாமல் தான் வருவார். மாஸ்டர் படத்திற்கு மட்டும் நண்பர் அஜித் போல் கோட் சூட் போட்டு வருவோமே என்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இந்த நிலையில் பொது மேடைக்கு வரும்போது நடிகர் விஜய் தன்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் நேற்று எதர்ச்சியாக வாரிசு இசையை வெளியிட்டு விழா நிகழ்ச்சியை சன் டிவியில் பார்த்தேன். அதில் விஜய் தோற்றம் மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது. நல்ல ஆடை மற்றும் தாடி முடியை எல்லாம் நெறிப்படுத்தி வந்திருக்கலாம்.

சிம்பிளாக இருப்பதாக சொல்வது வேறு ஒரு நிகழ்ச்சிக்கு எப்படி வருகிறோம் என்பது வேறு. விஜயை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு விஜய் ஒரு நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும். சினிமாவில் ஆடம்பரமாக உடை அணிந்து உங்களுக்கு சலித்து போய் இருக்கலாம்.ஒரு இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதெல்லாம் சினிமாவை பார்த்து தான் பாமர மக்கள் கற்றுக் கொள்வார்கள்.

Advertisement

ஹாலிவுட் ,ஆந்திராவிலும் கூட இது போன்ற நிகழ்ச்சிகளில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்று அனைவரும் அறிந்தது தான் என்பதால் நல்ல உடைகளை அணிந்து வந்தால் அதனை பார்த்து மகிழ்ச்சி அடையப்போகிறது ரசிகன் தான் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். விஜய் இது போன்ற நிகழ்ச்சிக்கு வரும்போது தன்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ஜேம்ஸ் வசந்தன்  கருத்தை பல்வேறு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top