தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் பாடல் ஒன்று நேற்று ரிலீசானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 12 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை இந்த பாடல் பெற்றது.
இதன் மூலம் அரபிக் குத்து சாதனையை நான் ரெடி பாடல் முறியடித்து இருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் விஜய்யின் ஸ்டைல் திருமலை படத்தில் தளபதி விஜய் பார்த்தது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமலை லுக்
திருமலை படத்தில் விஜய் சிகரெட்டை வாயில் வைக்கும் விதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதேபோன்று ஒரு ஸ்டைலை நடிகர் விஜய் இதில் பின்பற்றி வருகிறார்.
மேலும் மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான் பாரு போன்ற வரிகளும் விஜயின் பழைய படங்கள் நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாடலுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் இந்த பாடலுக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு நாள் முன்பு மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய் நல்ல கருத்துக்களை கூறியதாகவும்,ஆனால் அவருடைய படத்தில் தண்ணீர் தம்மு புகையிலை என்ற பாடல் வரிகள் இடம்பெற்று இருப்பதாகவும் நடிகர் விஜய் மது அருந்தும் போன்ற காட்சிகள் இடம் பெறுவதாகும் சிலர் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.
இது போன்ற காட்சிகள் இளம் தலைமுறையினரை சீர்கெடுக்கும் என்றும் இந்த காட்சிகளை நடிக்காமல் விஜய் தவிர்க்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே நடிகர் விஜய் சிகரெட் வைத்து நடித்ததற்கு பாமக சார்பாக எதிர்ப்பு எழுந்திருந்தது.
விஜய் ரசிகர்கள் விளக்கம்
இன்னும் இது ஒரு ரவுடி கும்பல் தொடர்பான படம் என்றும் அதில் ரவுடிகள் எப்படி இருப்பார்களோ அதைப்போல தான் காட்சி வைக்க முடியும் என்றும் இதனை ஏன் சில குழப்பிக் கொள்கிறார்கள் என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரவுடி கும்பலில் இருக்கும் ஒருவன் முத்திரை போல வா காட்ட முடியும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.