சினிமா

நானே வருவேன் படத்தின் முதல் பாட்டு & டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு ! பொன்னியின் செல்வனுடன் மோதல் !

Naane Varuven and Ponniyin Selvan

செல்வராகவன் – தனுஷ் சகோதரர்கள் கூட்டணியில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நானே வருவேன். ஆக்க்ஷன் த்ரில்லர் வகையில் சேரும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

ஆனால் இனி எந்த வித குழப்பமும் சந்தேகமும் தேவையில்லை. செப்டம்பர் இரண்டாவது வாரம், அதாவது 5ஆம் தேதி முதல் படக்குழு திரைப்பட வெளியீடு மற்றும் புரொமோஷன் வேளைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளது. ஏற்கனவே திருச்சிற்றம்பலம் வெற்றிக்குப் பின் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். தற்போது செல்வராகவன் – தனுஷ் – யுவன் வெற்றிக் கூட்டணியில் வெளியாகவிருக்கும் மற்றொரு படத்தின் அப்டேட்களை பெறவிருப்பதால் அவர்களுக்கு கூடுதல் உற்சாகம் தான்.

Advertisement

படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டிரெய்லர்

செல்வராகவன் படங்களுக்கு யுவன் தரமான இசையைக் கொடுத்துள்ளார். இம்முறையும் ரசிகர்கள் அதையே எதிர்பார்க்கின்றனர். படத்தின் முதல் பாடல் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவிருக்கிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வரவில்லை. நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் நாம் அதை எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக அனைவரும் காத்திருப்பது படத்தின் டிரெய்லருக்காக தான். செப்டம்பர் 11ஆம் தேதி நடக்கும் ஓர் விருது விழாவில் நானே வருவேன் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 2வது வாரம் முதல் தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் வரவிருக்கிறது. முதலில் படத்தின் சிங்கிள், பின்னர் டிரெய்லர் அதையடுத்து ஆல்பம் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

Advertisement

பொன்னியின் செல்வனுடன் மோதும் நானே வருவேன்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான டீஸர் மற்றும் 2 பாடல்கள் சூப்பர் ஹிட். 5 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படத்துடன் நானே வருவேன் படத்தை ரிலீஸ் ஆகப்போகிறது என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வி கிரியேஷன்ஸ் துணிச்சலுடன் இம்முடிவை எடுத்துள்ளது. பொன்னியின் செல்வனுடன் மோத திட்டமிட்டுள்ளார்கள் என்றால் படத்தின் மேல் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றே அர்த்தம். இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில், கதாநாயகனாக மற்றும் வில்லனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தின் கதையை தனுஷ் தான் எழுதினார் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 30ஆம் தேதி இந்த இரு படங்கள் வெளியாகிறது. 30ஆம் தேதி ரிலீஸ் ஆன மறு தினத்தில் இருந்து 4 நாட்கள் பூஜை விடுமுறை இருப்பதால் முதல் நாள் நல்ல விமர்சனங்கள் பெரும் படம் பாக்ஸ் ஆபீஸில் கலெக்ஷனை அல்லும். பொன்னியின் செல்வனை எதிர்த்து நானே வருவேன் வெற்றி அடையுமா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top