இந்திய சினிமாவில் ஈடற்ற நடிப்பை வெளிக்காட்டி பிலிம்பேர், தேசிய விருது என பல அவார்டுகளை குவித்து ஹாலிவுட் வரை சென்று நடித்தவர் தனுஷ். ஜீனியஸ் என்றழைக்கப்படும் அவரது அண்ணன் செல்வராகவன் கோலிவுட்டில் கல்ட் கிளாசிக் படங்கள் கொடுத்துள்ளார். தனுஷ் – செல்வராகவன் காம்போவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இருவரும் இணைந்து துள்ளவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என மொத்தம் 4 படங்களை வெற்றிப் படங்களை தந்துள்ளனர். இவை அனைத்தும் எக்காலத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்கள்.
அடுத்ததாக அண்ணன் தம்பி இணைந்து 3 முக்கிய திரைப்படங்களை கொடுக்கவுள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 படத்தை நிச்சயம் இயக்கவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் உறுதி அளித்துள்ளார். ஆனால் அதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள நானே வருவேன் எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பை படக்குழு சென்ற ஆண்டு 2 போஸ்டர்கள் கொண்டு வெளியிட்டது.
தற்போது ரசிகர்கள் அனைவரும் இந்தப்படத்தின் அப்டேடை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விநியோகிஸ்தர்கள் மற்றும் சினிமா ஆட்கள் இப்படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு பிரம்மித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, “ டிரெய்லர் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஸ்லோ மோஷன் ஷாட்கள், கலரிங் எல்லாம் டாப் கிளாஸ். யுவனின் பிஜிஎம் அற்புதம். ” என்று முழுக்க முழுக்க பாசிட்டிவ் ரிவ்வியூ கொடுத்துள்ளனர்.
நானே வருவேன் திரைப்படத்தின் கதையை தனுஷ் தான் எழுதியுள்ளார். படத்தில் அவர் கௌபாய் கதாபாத்திரத்தில் இரு வேடங்களில் நடிக்கவும் உள்ளார். அதாவது நாயகன் & வில்லன் இரண்டும் தனுஷ் தான். படம் ஹாரர் ( திகிலான பேய் படம் போல ) வகையில் தயாராகியுள்ளது என சிலர் கூறியுள்ளனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது படத்தின் டிரெய்லரை பார்த்தால் தான் உறுதிப்படுத்த முடியும்.
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதை விட பெரிய அப்டேட் என்னவென்றால் செப்டம்பர் மாதம் கடைசியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இணையாக ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.