சினிமா

சமந்தாவுக்கு குட்பை – அடுத்த காதலியை தேர்ந்து எடுத்த நாகசைதன்யா

தெலுங்கு சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுடன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா என்ற தமிழ் படத்தில் தெலுங்கு வர்ஷனில் இருவரும் இணைந்து நடித்தார்கள்.இதையடுத்து இவர்கள் இருவரும் சூர்யா மஜிலி போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். இதை தொடர்ந்து இவர்களுக்கு இடையில் நீண்ட காலமாக காதல் வளர்ந்து வந்தது. 2017 சட்டபூர்வமாக திருமணமும் செய்து கொண்டார்கள். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திருமணம் ஆன சில ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிரிவதாக 2021 அறிவித்தார்கள்.அதேபோன்று சமந்தா, நாகசைத்தன்யாவின் குடும்ப பேரான அக்கினி என்பதை தன் பெயரிலிருந்து நீக்கி இனி தனக்கும் நாக சைதன்யா எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக வெளி உலகத்திற்கு காட்டினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலும் சமந்தா தற்பொழுது தன் சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகிறார். அதேபோல் நாகசைதன் யாவும் தன்னுடைய சினிமா வாழ்வில் அடுத்தடுத்து வாய்ப்பை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது அமீர்கான் நடிக்கும் லான்சிங் சாந்த் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

லால் சிங் சாந்த் திரைப்படம் சம்பந்தமான பேட்டியில் நாக சைதன்யாவிடம் சமந்தா விற்கும் உங்களுக்கும் இடையிலான விவாகரத்தை பற்றி கேட்டதற்கு அதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் அதைப் பற்றி பேசி மிகவும் சலிப்பாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.அது மட்டுமல்லாமல் நானும் சமந்தாவும் தற்பொழுது ஒரு சிறந்த நண்பர்களாக இருக்கிறோம் என்றும் நான் விரும்பும் இல்லா குணங்களோடும் என் மனதிற்கு பிடித்தது போன்று ஒரு காதல் அமைந்தால் நான் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் தெலுங்கு,மலையாளம, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வரும் சோபிதா துள்ளிபாலா என்ற நடிகையோடு டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.இதனால் நிச்சயமாக சைதன்யா சமந்தாவை மறந்து தனது அடுத்த காதல் பயணத்தை தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top