Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாவீடியோ- சாலை ஓரத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்த நயன்தாரா! ரசிகர்கள் கேள்வி

வீடியோ- சாலை ஓரத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்த நயன்தாரா! ரசிகர்கள் கேள்வி

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அண்மையில் சர்ச்சை ஒன்று சிக்கினார். தனது கணவருடன் கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு நயன்தாரா சென்றிருந்தார்.

அப்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் நயன்தாராவின் தோளில் கை வைத்தார். இதில் கடுப்பான நயன்தாரா ஆடையை சரி செய்து கொண்டு இதுபோல் கை வைக்க கூடாது என்று கோபத்தில் சொன்னார்.

- Advertisement -

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. நயன்தாராவா இப்படி திமிராக நடந்து கொண்டார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு உணவு மற்றும் துணிகளை வாங்கி கொடுத்துள்ளார்.

- Advertisement -

காரில் இருந்து கீழே இறங்கி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரவு நேரத்தில் இந்த உதவியை செய்து இருக்கிறார்கள். இதற்கு வரவேற்பு இருந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதவி செய்ததை ஏன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகிறீர்கள். அப்போது இது விளம்பரத்திற்காக செய்யப்பட்டதா என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vignesh Shivan and Nayanthara couple helping the needy! pic.twitter.com/3AIpVwkTxU— Rajasekar (@sekartweets) April 8, 2023

இந்த வீடியோவை அவர்கள் எடுக்கவில்லை என்றாலும் பிரபலங்கள் வருகிறார்கள் என்று வேறு யாராவது எடுத்து இருப்பார்கள் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கும்பகோணத்தில் மாணவிகளுடன் நடைபெற்ற சம்பவத்தை மறைப்பதற்காக நயன்தாரா இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது என்னவோ இது போன்ற உதவிகளை பிரபலங்கள் செய்வது மூலம் ஏழைகள் கஷ்டம் தீர்ந்தால் நல்லது தான்.

Most Popular