சினிமா

நயன்தாரா பாத்ரூமில் நீர்வீழ்ச்சி ! கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டில் இன்னும் என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா ?

Vignesh Shivan and Nayanthara house

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா வின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருமண உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டார். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கோலாகலமாக இந்த திருமண விழா சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்றது. நயன்தாரா , விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்தை ஒட்டி சுமார் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கினர்.

திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தேன்நிலவு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இருவரும் திருமண கொண்டாட்டத்தை நிறைவு செய்து, அவர்களது வேலைக்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் சென்னையின் ஆடம்பர பகுதியாக கருதப்படும் போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ,கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் ஜோடி போயஸ் கார்டலில் குடியேற உள்ளனர்.

ஏற்கனவே உள்ள அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை இந்த ஜோடி மொத்தமாக வாங்கியுள்ளது. இந்த தளங்களின் இன்டீரியர் டிசைன்களை மாற்றி அமைக்க நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து பிரபல நிறுவன பொறியாளர்களை வரவழைத்துள்ள இந்த ஜோடி வீட்டை தங்களுக்கு பிடித்தார் போல் மாற்றி அமைக்க அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக பாத்ரூம் மட்டுமே மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட உள்ளது. நயன்தாரா பயன்படுத்தும் பாத்ரூமில் குளிப்பதற்கு ஏதுவாக செயற்கை நீர்வீழ்ச்சியை அமைக்க விக்னேஷ் சிவன் ஆசைப்பட்டு உள்ளார் . இதனை மும்பை நிறுவனத்திடம் அவர் தெரிவிக்க அதற்கான வேலைகள் தற்போது நடைபெறுகிறது. வீட்டிலே உடற்பயிற்சி கூடம் , ஹோம் தியேட்டர் போன்ற வசதிகளை அமைக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா ராஜ் ஜோடி முடிவு எடுத்துள்ளது. இன்டீரியர் டிசைன்களுக்காக மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளனர். இருவரும் இணைந்து இதற்கான செலவை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top