Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஎனக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமே வேணாம் ஆளை விடுங்கப்பா.. நயன்தாரா பேச்சு.. !

எனக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமே வேணாம் ஆளை விடுங்கப்பா.. நயன்தாரா பேச்சு.. !

கோலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய படங்களில் இருந்து இந்த ஆண்டு மிகப் பெரிய உயரத்தை எட்டியுள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானுக்கு ஜோடியாக 1000 கோடி வசூல் செய்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக தனித்து படங்கள் செய்யும் நயன்தாரா அவர்கள் அவ்வப்போது இது போலவும் நடிக்கிறார்.

- Advertisement -

அண்மையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணப்பூரணி எனும் படத்தில் நடிதில் நடித்திருந்தார். இதில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன் ஜெய், சத்தியராஜ் நடிக்க ராஜா ராணி காம்போ மீண்டும் இணைந்தது. இவர்கள் தவிர கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, பூர்ணிமா ஆகியோரும் முக்கிய வேடங்களில் வருகின்றனர்.

டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் சுமாரான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அனிமல், பார்க்கிங் ஆகிய இரு படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றதால் நயன்தாராவின் படத்திற்கு பெரிதாக யாரும் கவனம் செலுத்தவில்லை. விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தப் படத்துக்கு பிறகு நயன்தாரா நேர்காணல் ஒன்றில் நாது பட்டத்தைப் பற்றி பேசினார். எனக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமே வேண்டாம் ஆளை விடுங்கப்பா எனும் அளவுக்கு சொல்லி இருந்தார். அவர் கூறியதாவது, “ என்னை லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். நான் அந்த நிலைக்கு இன்னும் தகுதி பெறவில்லயா அல்லது பெண் என்பதால் அப்படி அழைக்கக்கூடாது என நினைக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ” என்றார்.

- Advertisement -

மேலும், தனது பயணம் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை நோக்கி அல்ல என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்களுக்கு பிடித்த நாயகியை குறிப்பிட்டு உண்மையான லேடி சூப்பர்ஸ்டார் என சமூக வலைத்தளத்தில் பதிவிடும் போது நயன்தாரா அதற்க்கு தகுதியானவர் இல்லாதது போல சொல்வது போல இருக்கிறது. இதன் பின்னர் லேடி சூப்பர்ஸ்டார் குறித்த மோசமான பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் கேட்க வேண்டாம் என நினைத்து நயன்தாரா அண்மையில் பேசியுள்ளார் எனத் தெரிகிறது.

Most Popular