Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாநயன்தாராவின் மார்க்கெட்  சரிந்தது.. முதலிடம் பிடித்த திரிஷா

நயன்தாராவின் மார்க்கெட்  சரிந்தது.. முதலிடம் பிடித்த திரிஷா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. 5 கோடி ரூபாய் சம்பளம் ஹீரோவுக்கு நிகரான மரியாதை, கெத்து என வலம் வந்தவர். நயன்தாரா  பல்வேறு படங்களில் ஹீரோவே இல்லாமல் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அதில் பல படங்கள் தோல்வி அடைந்தது தான் உண்மை. இதன் மூலம் ஹீரோயின்கள் கதாநாயகனாக நடிக்கும் பழக்கமே உண்டானது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் கடுமையாக சரிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு வெளியான அனைத்து படங்களும் நயன்தாராவுக்கு படுதோல்வி கொடுத்திருக்கிறது. ஹாட் ஸ்டார் இல் வெளியான o2 எதிர்பார்த்து வெற்றி கொடுக்கவில்லை.

- Advertisement -

இதே போன்று கனெக்ட் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்த இந்த படம் வந்ததே தெரியாத அளவிற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. நயன்தாராவின் மார்க்கெட்டை நம்பி மலையாளத்தில் எடுக்கப்பட்ட கோல்டு திரைப்படம் படுமோசமான தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

இதே போன்ற காட்பாதர் என்ற திரைப்படமும் நயன்தாராவுக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது. கடைசியாக வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாராவின் கேரக்டர் குறித்து யாரும் பெரிதாக பேசவே இல்லை. அனைவரும் கதீஜா கதீஜா என்ற சமந்தா பின்னாலே சுற்றினார்கள்.

இதனால் அதுவும் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. அதற்கு முன் வெளியான அண்ணாத்த திரைப்படமும் தோல்வியை கொடுத்தது. இதனால் ஜவான் படத்தை நயன்தாரா நம்பியிருக்கிறார். நயன்தாராவுக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டதால் ரசிகர்களும் தற்போது அவருடைய மார்க்கெட்டும் சரிய தொடங்கி விட்டது.

இந்த நிலையில் திரிஷா பொன்னியின் செல்வன்,லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்த வருகிறார். மேலும் அஜித்துக்கும் தற்போது ஜோடியாக இணைய இருக்கிறார். இதனால் தற்போது திரிஷா தான் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular