சினிமா

சினிமாவுக்கு குட் பை சொல்லப் போகும் நயன்தாரா..! கைவசம் 2 படமே இருக்கிறது

2023 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அய்யா திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த நயன்தாரா அவருடைய எதார்த்தமான திறமை மிக்க நடிப்பால் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Advertisement

ஐயா, சந்திரமுகி போன்று திரைப்படங்களில் நடிக்கும் பொழுதிலிருந்து இவருக்கென்று ரசிகர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் தல அஜித்தின் உடன் நடித்த பில்லா திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்கள் உருவாகியது. ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் கதாநாயகியாக நடித்து வந்த நயந்தாரா தமிழ் சினிமாவில் தனக்கு இருக்கும் வரவேற்பினால் அறம், o2, வாசுகி, டோரா ,மாயா, போன்ற திரைப்படங்களில் பெண் கதாநாயகனாக படங்களை நடிக்க தொடங்கினார் .

Advertisement

இந்தத் திரைப்படங்களும்  நயன்தாராவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நயன்தாராவிற்கு கச்சிதமாக பொருந்தும். கமர்ஷியல் பிலிம், திரில்லர் ஃபிலிம், டிவோஷனல் ஃபிலிம் என்று எல்லாவிதமான திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா தன்னுடைய நடிப்பு திறனை காட்டி இருக்கிறார்.

பெண் கதாநாயகி 20 வருடமாக மார்க்கெட் குறையாமல் சினிமாவில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த சாதனையை புரிந்தவர் நடிகை நயன்தாரா. ஆனால் தற்பொழுது கடந்த ஜூன் எட்டாம் தேதி தன்னுடைய காதல் கணவன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்தார். சாதாரணமாகவே கதாநாயகிகளுக்கு திருமணத்திற்குப் பிறகு சினிமா உலகில் ஒரு சரிவு ஏற்படும்.

அதனால் தான் பெரும்பாலும் எல்லா கதாநாயகிகளும் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். அதில் நயன்தாரா விதிவிலக்கு இல்லை என்பது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது. 38 வயதிலும் பேரழகாக இருக்கும் நயன்தாராவிற்கு திருமணமான காரணத்தால் ரசிகர்களுக்கு அவர்கள் இருக்கிறார்கள் ஈர்ப்பு குறைந்து விட்டது. இதனால் தற்பொழுது நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு ஓய்வு பெற போவதாக முடிவு எடுத்து இருக்கிறார்.

நயன்தாரா ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற திரைப்படத்திலும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஜாவான் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படங்கள் பிறப்போக்கும் வெற்றியை கொண்டுதான் நடிகை நயன்தாரா சினிமாவில் தன் பயணத்தை தொடரலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க இருக்கிறார். இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top