சினிமா

முதல் முறையாக படத்தில் இடைவேளை இல்லை ! நயன்தாராவின் அடுத்த திகில் திரைப்படம் !

Nayanthara Connect

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனித்து நின்று அறம், இமைக்கா நொடிகள், கொலயுதிர் காலம், நெற்றிக்கண் போன்ற நல்ல திரில்லர் திரைப்படங்களை தந்துள்ளார். அதே பிரிவில் அவரது அடுத்த படம் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கனெக்ட். இந்த படத்தின் டிரெய்லர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியானது. பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. டிரெய்லரில் முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக தென்படுகிறது.

ஏற்கனவே இதே பாணியில் 2015ஆம் ஆண்டு மாயா எனும் வெற்றிகரமான திரைப்படத்தை இந்தக் கூட்டணி தந்துவிட்டது. மாயா படத்தைக் கண்டதால் ரசிகர்கள் அனைவரும் இந்தக் கூட்டணியின் இரண்டாவது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

சென்சார் வேலைகள் அனைத்தும் முடிந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 99 நிமிடங்கள் கொண்ட இப்படத்தில் இடைவேளை இல்லை. இதுவே முதல் முறை எனவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் இதனை ரிலீஸ் தேதியுடன் அறிவித்தார். “ 22.12.2022 வாருங்கள் அனைவரும் திரையரங்கில் கனெக்ட் ஆவோம். இந்த திகில் படத்தை குடும்பத்துடன் இணைந்து கண்டு களியுங்கள். ” எனப் பதிவிட்டுள்ளார்.

படத்தில் கதாநாயகி நயன்தாரா குறித்து இயக்குனர் அஷ்வின் சரவணன், “ நயன்தாராவை தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இணைவது எனக்கு சுலபமாகிவிட்டது. முழு கவனத்தையும் இதில் செலுத்தி அடுத்து என்ன இதை எப்படிச் செய்யலாம் எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். சிறப்பான காட்சிகள் வந்துள்ளதில் எனக்கு திருப்தி. ” என்றார்.

இதில் நயன்தாரா தவிர சத்யராஜ், அனுபாம் கர், வினய் ராய் மற்றும் ஹனியாஸ் நபிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தங்களது முகங்களைக் கொடுத்துள்ளனர். படத்திற்கான இசை வேலைகளை பிரித்வி சந்திரசேகர் பார்த்துக்கொள்கிறார். மாயா படத்தைப் போல இதுவும் ஓர் திகில் விருந்தாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top