சினிமா

அதுக்குள்ளயா ? இரட்டைக் குழந்தைகள் பெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி ! எப்படி தெரியுமா ?

Nayanthara Vignesh Shivan twins

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்ற ஜூன் 9ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நபர்களை மட்டும் அழைத்த திருமணம் செய்து கொண்டனர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தலைமையில் அவர்களது திருமணம் விரைவில் ஒரு வீடியோ படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளது. ‘ நயன்தாரா : தி ஃபேரி டேல் ’ என பெயரிடப்பட்டுள்ள வீடியோ படத்தின் டிரெய்லரை இரண்டு வாரங்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது.

இந்த வீடியோ படம் வெளியாகும் முன்பே இந்த புதிய தம்பதிகள் அவர்களது வாழ்கையின் மிகப் பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளனர். இந்த இரு அழகான தம்பதிகளுக்கு இரு அழகான ஆண் ( இரட்டைக் குழந்தைகள் ) பிறந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் சரியாக 6:30 மணிக்கு “ நானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆன் குழந்தைகள் பிறந்துள்ளது. எங்களுடைய பிரார்த்தனை, முன்னோர்களின் ஆசிர்வாதம் எல்லாம் சேர்ந்து 2 அழகான குழந்தைகளாக வந்துள்ளது. எங்களின் உயிர் & உலகத்திற்கு உங்களுடைய ஆசீர்வாதமும் துணையும் தேவை. ” என பதிவிட்டிருந்தார்.

Advertisement

இருவரும் வாடகைத் தாய் மூலமாக குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு 5 மாதங்கள் முன்பே முன்பே இருவரும் இதை முடிவு செய்துவிட்டனர் என இப்போது தெரியவருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளது. அவர்களது பெற்றோர் வாழ்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top