சினிமா

சூப்பரா இருக்கு.. ! நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ.. நெட்பிளிக்சில் வெளியான டீசர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி. இயக்குனர்கள் ஒருவரான விக்னேஷ் சிவனை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் பரவி இருந்தது. மேலும் இவர்களுடைய ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் எப்பொழுது நடக்கும் என்று ஆர்வத்தோடு இருந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

Advertisement

.திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம் ,இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகிய சூர்யா,ஜோதிகா,நடிகர் விஜய் சேதுபதி ,இசையமைப்பாளர் அனிருத் என்று தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் ஆக்டர் ஷாருக்கான் போன்ற திரையுலக பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வாறான மிக முக்கியமான பிரபலங்கள் தன் திருமணத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்றது போன்ற மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் என்ற பிரம்மாண்டமான ரிசோர்ட்டில் தன்னுடைய திருமணத்தை மிக விமர்சையாக நடத்தினார் நயன்தார. மேலும் இந்த திருமணத்தில் பிரபலங்களைத் தவிர வேறு எந்த பார்வையாளர்களையும் அனுமதிக்காத அளவிற்கு மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. மேலும் நயன்தாரா உடைய திருமணத்தில் நடந்த அனைத்து விஷயங்களும் மிகவும் ரகசியமான முறையிலும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற்றது.

Advertisement

இன்றைய காலத்தில் தன்னுடைய திருமணத்தை ஒரு படமாக( வெட்டிங் ஸ்டோரி) எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது சாமானிய மக்கள் கூட சாதாரணமாக செய்யக்கூடிய விஷயமாக உள்ளது.இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நயன்தாராவினுடைய திருமணம் பலரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிச்சயம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட திருமணத்தை ஒரு திரைப்பட வடிவில் அமைத்து netflix கொடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

அதற்காகத்தான் தான் திருமணம் நடக்கும் பொழுது அதிலிருந்து எந்த ஒரு ஏற்பாடுகளும் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவருடைய திருமணத்தின் போது எல்லா நிகழ்வுகளையும் ரகசியமாக பாதுகாத்தார்கள். இதைத்தொடர்ந்து நயன்தாரா உடைய திருமண திருமணப் படத்தின் டீசர் நெட்லிக்ஸ் ஆகஸ்ட் 9ம் தேதியான இன்றுவெளியாகி உள்ளது. அந்த டீசரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரைப் பற்றி ஒருவரை நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவை தான் அவருடைய குணத்தை விரும்புவதாக கூறியிருக்கிறார். மேலும் அதில் நயன்தாரா திருமணத்திற்காக தயாராகும் காட்சி வெளிப்பட்டிருக்கிறது. நயன்தாராவின் வாழ்வில் எண் 9 இயற்கையாகவே அவருடைய சிறப்பான தினங்களில் அமைந்து வருகிறது. நயன்தாராவின் உடைய பிறந்த நாள் நவம்பர் 18 விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் செப்டம்பர் 18 இந்த இரண்டு தேதியையும்1+8 என்று கூட்டினால் 9 என்று வரும் நயன்தாரா உடைய பெயரிலேயே 9 (நயன்) என்ற எண் இருக்கிறது. இதன் காரணமாக கூட நயன்தாரா தன் வாழ்வில் நடக்கும் சிறப்பான நாட்களை எல்லாம் 9 வருவது போன்று தேர்வு செய்திருப்பார்.

ஏனெனில் இவர்களின் திருமண நாள் ஜூன் 9 என்று முடிவு செய்து நடத்தினார்கள்.இதே போல் தற்பொழுது ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று தன் திருமணத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் செப்டம்பர் 9ம் தேதி இவர்களுடைய திருமண படம் நெட்பிளிக்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top