Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇது துணிவு இல்லப்பா பீஸ்ட் 2 ! துணிவு - பீஸ்ட்டில் நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ள...

இது துணிவு இல்லப்பா பீஸ்ட் 2 ! துணிவு – பீஸ்ட்டில் நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ள 10 ஒற்றுமைகள் !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணிவு படத்தின் டிரெய்லர் வருடத்தின் கடைசி நாள் 7 மணிக்கு வெளியாகியது. டிரெய்லரில் முன்னது சொன்னது போல வங்கியை அஜித் தலைமையிலான ஓர் குரூப் கொள்ளை அடிக்கும் காட்சிகள் நிறைந்து உள்ளன. டிரெய்லர் முழுவதும் அஜித்தின் லுக் மாஸாக இருந்தது. காதில் தோடு அணிந்து ஈவில் சிரிப்போடு கூலாக தன் வில்லனிசத்தை காட்டியிருக்கிறார்.

- Advertisement -

டிரெய்லரில்‌‍ அஜித்தை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளும் பீஸ்ட் படத்தின் வைப்ஸில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பார்வையாளர்கள் அனைவரும் அதையே உணர்துள்ளனர். பீஸ்ட் பட டிரெய்லரையும் துணிவு பட டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்க்கையில் 10 பொருத்தங்கள் கண்டுடெடுக்கப்பட்டுளன.

பீஸ்ட் டிரெய்லரில் ஈஸ்ட் கோஸ்ட் மால் ஹைஜாக் செய்யப்பட்டது போலவே துணிவு டிரெய்லரிலும் யுவர் பேங்க் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டில் மாஸ்க் அணிந்த வில்லன் துப்பாக்கியை வைத்து மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறார். பீஸ்ட்டில் மக்கள் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப்டிருந்தனர். இங்கு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஒற்றுமை என்னவென்றால் இங்கு பணியாளர்கள் கை கால்கள் கட்டப் பட்டு வில்லன்கள் பிடியில் சிக்கிருக்கின்றனர்.

- Advertisement -

இரு படங்களிலும் முன்னணி நடிகர்கள் வெள்ளை சட்டையில் இரத்தக் கரை கொண்டுள்ளனர். துப்பாக்கி சுடும் காட்சிகள் மற்றுமொரு ஒற்றுமை. மால்/பேங்க் ஹைஜாக்கில் எப்படி சேசிங் காட்சிகள் என்ற கேள்வி வரலாம், ஆனால் இரண்டிலும் இருக்கிறது. அங்கு ஜெட்டில் இங்கு படகில். மேலும் இரண்டிலும் அரசியல் வாதிகள் சூழ்ச்சி தெரிகிறது.

- Advertisement -

பீஸ்ட் படம் முழுக்க முழுக்க டார்க் காமெடி கொண்டது. துணிவு டிரெய்லரில் உங்களுக்கு என்ன சார் வேணும் என்பதற்கு அஜித்குமார் ” பேங்க் உள்ள வந்துட்டு பிரியாணியும் குவாட்டருமா கேப்பாங்க ” எனும் மொக்க ஜோக்கை போட்டு இருப்பார். மேலும் துணிவு படத்தில் தங்கதுரை, ஜி.பி.முத்து, மைப்பா மற்றும் சில காமடியர்கள் இருப்பதாலும் ஹெச்.வினோத் ஃபேமிலி ஆடியன்சை நம்பியிருப்பதாலும் துணிவு படத்தில் மேலும் சில காமெடிகளை எதிர்பார்க்கலாம்.

இவை அனைத்தும் இணையத்தில் பகிரப்பட்டவை. பீஸ்ட் படத்தைப் போலவே துணிவு அமையும் என்று கூறவில்லை. படத்தின் டிரெய்லரில் எதுவும் பெரிதாக காட்டாமல் படத்தில் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் காட்ட படக்குழு எண்ணி இருக்கலாம். படத்தில் இயக்குனர் வினோத்தின் டச் நிச்சயம் இருக்குமென சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். பீஸ்ட் படத்தைப் போல் ஆகிவிடும் என அஜித் ரசிகர்கள் பயப்பட வேண்டாம், இயக்குனர் வினோத் கட்டாயம் கைவிட மாட்டார். அஜித்தின் மரணமான லுக்கில் படம் பிரம்மாண்ட வெற்றியடையும்.

Most Popular