Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாஎஸ்கே 21 திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தளபதியாகும் வாய்ப்பு.. எப்படி தெரியுமா..?

எஸ்கே 21 திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தளபதியாகும் வாய்ப்பு.. எப்படி தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இண்டஸ்ட்ரி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படம் ராணுவ பின்னணியில் இயக்கப்பட்டு வருகிறது . இதில் மிகவும் வலுவான உணர்ச்சிகளும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. நகைச்சுவையான பாணியில் நடித்து வரும் சிவகார்த்திகேயனை டாக்டர் திரைப்படத்தின் மூலம் தான் சீரியஸான கேரக்டராக பார்க்க முடிந்தது. அதேபோல் இந்தத் திரைப்படமும் ஒரு சீரியஸான கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மேலும் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போவதாக படக்குழுவினர்கள் தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பல பிரபலங்கள் பார்த்திருக்கிறார்கள்  பார்த்த பிரபலங்கள் எல்லாம் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிர்கு  நல்ல வரவேற்பை தந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது அதைத்தொடர்ந்து அவர் நடித்த இந்த மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால் தற்பொழுது இவர் நடித்துக் கொண்டிருக்கும் எஸ்கே 21 என்று திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. தற்பொழுது தமிழ் சினிமாவை பொருத்தவரை எந்த பெரிய ஹீரோக்கலின் திரைப்படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வருவதில்லை. விஜய் தற்பொழுது கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்குப் பிறகு அவரும் அரசியல் செல்ல போவதாக அறிவித்திருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வெற்றி அடைந்தால் தமிழ் சினிமாவில் அடுத்த தளபதியாக கூட சிவகார்த்திகேயன் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular