Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியை அவமானப்படுத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ்? கமல் ரசிகர்கள் செம கலாய்

ரஜினியை அவமானப்படுத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ்? கமல் ரசிகர்கள் செம கலாய்

தற்போதைய சினிமா உலகில் ஒரு பாடல் மிகப்பெரிய ஹிட் அடைவதற்கு பாடல் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஃபர்ஸ்ட் சிங்கிள் என்று அழைக்கப்படும் பாடல் ஒன்று படத்திலிருந்து வெளியிடப்படும்.

- Advertisement -

இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது இந்தப் படத்திற்கு பிரபலத்தையும் கொண்டுவரும். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படத்தின் முதல் சிங்கள் இன்று மாலை ரிலீஸ் ஆகிறது.

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை தான் மிகவும் நம்பி இருக்கிறார். வசூலில் 400 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றால் மட்டுமே மீண்டும் நம்பர் ஒன் இடத்தை அவரால் பிடிக்க முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் முதல் சிங்கள் போஸ்டரில் வெறும் தமன்னா மட்டும்தான் இடம் பிடித்திருக்கிறார். ரஜினி அந்த போஸ்டர் இல்லை. இது ரஜினி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ரஜினி படமா இல்லை தமன்னா படமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

ரஜினி படத்தின் முதல் சிங்கள் என்றால் ரஜினியின் போஸ்டர் தானே இடம் பெற்றிருக்க வேண்டும். என் தமன்னாவுக்கு முக்கியத்துவம் வழங்கி இருக்கிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி விடுகின்றனர். இதற்கு கமல் ரசிகர்கள் ரஜினியை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ரஜினியின் மார்க்கெட் குறைந்து விட்டதாலும் தற்போது தமன்னாவின் பெயர் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதாலும், தமன்னாவின் போஸ்டர் போட்டால்தான் நாடு தளவேளவில் பிரபலம் அடையும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிளில் கமல் போஸ்டரும்,லியோ படத்தில் முதல் சிங்கிளில், விஜய் போஸ்டரும் துணிவு படத்தின் முதல் சிங்களில் அஜித் போஸ்டரும் வந்த நிலையில் ஜெய்லர் படத்தின் முதல் சிங்கிலில் ரஜினி போஸ்டருக்கு பதில் தமன்னா போஸ்டர் வந்திருப்பதாகவும் அவர்கள் கிண்டல் அடித்த வருகின்றனர்.
இது ரஜினி ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே சன் பிக்சர்ஸ் இப்படி செய்து விட்டார்களா என்று கேள்வியும் இருந்துள்ளது.

Most Popular