Thursday, November 21, 2024
- Advertisement -
Homeசினிமாஜிபி முத்து ஒரு ஆம்பள சன்னி லியோன்.. சதீஷ் சர்ச்சை பேச்சு

ஜிபி முத்து ஒரு ஆம்பள சன்னி லியோன்.. சதீஷ் சர்ச்சை பேச்சு

- Advertisement -

பிரபல நடிகை சன்னி லியோன் நடித்திருக்கும் ஓ மை கோஸ்ட் என்ற பேய் திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை யுவன் என்ற இயக்குனர் எடுத்திருக்கிறார். இதில் சன்னி லியோன் பேயாகவும் ராணியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.இந்த நிலை இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் சதீஷ், ஓ எம் ஜி திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயின் அனைத்தும் சன்னி லியோன் தான். நாங்கள் எல்லாம் அவர்களுக்கு துணையாக தான் நடித்தோம்.இந்த படத்தில் முழுக்க முழுக்க சன்னிலியோனை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்காக சன்னி லியோனை அழைத்து வந்து நடிக்க வைத்ததற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
ஜிபி முத்து அவர்கள் இந்த படத்தில் சிறிய கேரக்டர் தான் செய்திருக்கிறார்.

- Advertisement -

இருப்பினும் படத்தில் விளம்பரப் பணிக்காக எங்கள் கூடவே இருக்கிறார். ஜி பி முத்துவின் கதை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பல கஷ்டங்களை சந்தித்து தற்போது ஒரு ஸ்டார் ஆக வளர்ந்து வந்திருக்கிறார். ஜி பி முத்துவுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் ஜிபி முத்துவின் பெயர் குஞ்சாங்கோ.  குஞ்சாங்கோ என்ற பெயரை வைத்துவிட்டு ஜிபி முத்து மாதிரி ஒரு ஆளை நடிக்க வைப்பதற்கு பதிலாக ஜி பி முத்துவே நடிக்க வைத்து விடலாமே என்று இயக்குனர் முடிவெடுத்து அணுகினார். ஜி பி முத்து ஒரு ஆம்பள சன்னிலியோன். அவர் விரைவில் அரசியல் கட்சியும் தொடங்க இருக்கிறார்.

- Advertisement -

30ஆம் தேதி நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த நான்கு படத்தையும் ரசிகர்கள் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்று சதீஷ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சன்னி லியோன், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த படம் பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும். என்னுடைய ஆங்கிலமும் இயக்குனரின் தமிழும் மோதிக்கொண்டு தான் இந்த படம் உருவானது.எனக்கு மொழி தெரியாததால் படத்தை முடிக்க கொஞ்சம் நேரம் ஆனது. இருப்பினும் எனக்காக பொறுத்துக் கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சன்னி லியோன் கூறினார்.

Most Popular