சினிமா

நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் திடீர் சிக்கல் ! பின்வாங்கும் ஓடிடி தளம்

Nayanthara marriage telecast

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா கடந்த மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, இயக்குனர் அட்லி, மணிரத்தினம், எஸ். ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊடகங்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை.இதற்கு காரணம் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை பிரத்தியேகமாக ஒளிபரப்ப ஓடிடி நிறுவனம் ஒன்று 25 கோடி ரூபாய் கொடுத்து அதன் உரிமையை வாங்குவதாக கூறியது. இதனால் திருமணம் எவ்வாறு நடந்தது என்பதை ஆர்வத்துடன் காண காத்திருக்கும் ரசிகர்கள் ஓடிடி நிறுவனம் எப்போது இதனை ஒளிபரப்புவார்கள் என காத்திருந்தனர்.

Advertisement

ஆனால் திடீரென்று ஓ.டி.டி நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.அதற்கு காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்த காரியம் தான் என கூறப்படுகிறது. திருமணத்தை ஒளிபரப்பு செய்வதற்கு முன் பிரபல ஓடிடி நிறுவனம் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் சில கட்டளைகளை போட்டு இருந்தது. அதில் திருமணம் ஆகும் புகைப்படத்தை தவிர வேறு எந்த புகைப்படத்தையும் வீடியோவையும் ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட கூடாது என்று கூறியிருந்தது.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் திருமணம் ஆன 30-வது நாளை கொண்டாடும் வகையில் திருமணத்திற்கு வந்திருந்த ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அட்லி , எஸ் ஜே சூர்யா ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு விதிகளை மீறி இருக்கிறார். இதனால் கடுப்பான ஓ டி டி நிறுவனம் விதிகள் மீறப்பட்டதால் திருமணத்தை ஒளிபரப்ப இயலாது என்று கூறியுள்ளது. இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு 25 கோடி ரூபாய் நஷ்டம் ஆகி உள்ளது. ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பும் என்பதை நம்பி திருமணத்திற்கு பெரும் செலவுகளை நயன்தாரா ஜோடி செய்ததாகும், தற்போது ஓடிடி நிறுவனம் விக்னேஷ் சிவன் செய்த தவறால் பின்வாங்கி இருப்பது நடிகை நயன்தாராவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top