கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது பார்க்கிங் திரைப்படம் . இந்த திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் ஹரிஷ் கல்யாண், எம் .எஸ் பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களம் ஆகும்.
IT யில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாணும் ஆபிஸர் ஆக இருக்கும் எம் எஸ் பாஸ்கரும் ஒரே வீட்டில் வாடகைக்கு மேலும் ,கீழும் தங்கி இருப்பது போன்று ஒரு பார்ங்கிற்கு ஈகோ ஓட சண்டை போட்டுக் கொள்வார்கள் .
ஒரு சின்ன ஈகோவால் இருவரின் வாழ்விலும் நிம்மதியை தொலைத்து விடுவார்கள். கடைசியில் கொலை செய்ய கூட இருவரும் துணிந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பார்க்கிங் பிரச்சினை அவர்களுக்குள் இப்படி ஒரு பகையை உருவாக்கி விடும். இதுதான் அந்த திரைப்படத்தில் கதை கரு ஆனால் இதில் 100 சதவீதம் உண்மை இருக்கிறது.
பொதுவாக ஒரு இயல்பான வாழ்வில் ஒரு சின்ன விஷயத்திற்காக நாம் சிந்தித்து சிந்தித்து வாழ்க்கையே தொலைத்து விடுகிறோம். அது அர்த்தமற்ற சிந்தனையாக கூட இருக்கலாம். அதன் மீது இருக்கும் ஆசையால் அது நமக்கு தான் கிடைக்க வேண்டும் பிறருக்கு கிடைக்க கூடாது என்ற சுயநலத்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத ஈகோ வாலும் தான் வாழ்வையே நாம் மாற்றி விடுகிறோம்.வாழ்க்கையில் நிம்மதியையும் தொலைத்து விடுகிறோம் என்பது தான் அந்தக் கதையின் மையக்கருத்தும் ஆகும் .
தற்போதைய காலகட்டத்தில் இது அனைவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒரு செயலாகிவிட்டது.எம் எஸ் பாஸ்கர் ஹரிஷ் கல்யாணி கர்ப்பிணி மனைவியை பிரசவத்தில் பாதுகாத்து விடுவார். அதே போல் எம் எஸ் பாஸ்கரை கொள்ள நினைத்த ஹரிஷ் கல்யாணும் இதன் காரணத்தினால் அவரே அவரை அவரை காப்பாற்றியும் விடுவார். அதன் பிறகு இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள்.
இதுதான் அந்த திரைப்படத்தில் வெளியிடப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி யாகும். ஆனால் இதற்குப் பிறகு தற்பொழுது டெலிட் சீன்ஸ் என்று இணையத்தில் இந்த திரைப்படத்தினுடைய இன்னொரு கிளைமேக்ஸ் காட்சி வெளியிடப்பட்டு வைரலாகி இருக்கிறது.
கமலா தியேட்டருக்கு எம்எஸ் பாஸ்கர் அவருடைய குடும்பத்தாருடன் காரில் வந்திருக்கிறார். அங்கு பார்க் செய்வதற்கு இடம் இல்லை ஒரு கார் மட்டும் வெளியான பிறகு ஒரு பார்க்கிங் ஃப்ரீ ஆகிறது. அதில் எம்.எஸ். பாஸ்கரின் காரை பார்க் செய்வதற்கு செல்கிறார். அதேசமயம் ஹரிஷ் கல்யாணும் எதிரே அதே இடத்தில் பார்க் செய்ய வருகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக காரில் அமர்ந்த வாரே பார்த்துக் கொள்கிறார்கள். பிறகு இருவருமே சிரித்துக் கொண்டு பின்னோக்கி சென்று விடுகிறார்கள். யாருமே அந்த இடத்தில் பார்க் செய்யவில்லை .இருவருமே விட்டுக் கொடுக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டது போல் கிளைமாக்ஸில் முடித்து விட்டார்கள்.
அந்த கிளைமேக்ஸ் சீனை விட இந்த கிளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது இதை திரைப்படத்தில் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.