சினிமா

வேற மாதிரி திரும்ப வந்திருக்கேன்.. நீங்க உட்கார்ந்து மட்டும் பாருங்க – சிம்பு பேச்சு

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு அனைத்து திறமைகளும் உடைய நடிகர் என்றால் அது சிம்பு தான். கமல் போலவே சிறுவயதில் நடிக்க வந்த சிம்பு, பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற கலைஞராக திகழ்கிறார். இந்த நிலையில் சில தோல்விகளுக்கு பிறகு மீண்டும் மாநாடு படத்தின் மூலம் கம்பேக்  கொடுத்துள்ள நடிகர் சிம்பு, தற்போது ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.

Advertisement

சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ரசிகர்களிடம் நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசினார். அதில் இனி என் தலைவர் எப்படி படம் பண்றாரு பாருங்க என்று சமூக வலைத்தளத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.

நான் கஷ்டப்படும் போது நீங்கள் எனக்காக நிறைய கொடுத்து இருக்கிறீர்கள். என் தலைவன் எங்களுக்காக மீண்டும் வருவான் வருவான் என்று பலரும் எனக்காக முட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இனி உங்களை சந்தோஷப்படுத்த தான் நான் நடிக்க போகிறேன். என்னை இந்த மேடை வரை கொண்டு வந்து விட்டு விட்டீர்கள்.

Advertisement

இவ்வளவு நாள் என்னை நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள். இனி உங்களை நான் பார்த்துக் கொள்நடிகர்.இப்போது உங்களுக்காக நான் கொடுக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் சந்தோஷமாக அமர்ந்து ஏசி ரூமில் கூலாக சேர் போட்டு உட்கார்ந்து நான் செய்வதை மட்டும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். நான் வேற மாதிரி திரும்பி வந்து இருக்கேன் .

இனி நான் விடமாட்டேன். பொறுத்திருந்து பாருங்கள். இந்த படத்திலும் எனக்கு துணை கிடையாது, என் வாழ்க்கையிலும் எனக்கு துணை கிடையாது. என் துணை எல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று பேசிய சிம்பு ரசிகர்களுக்காக லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிம்பு ஸ்டுடியோ கிரின்ஸ் எடுத்து வரும் தங்கலான் திரைப்படம் சிறப்பாக உருவாகி வருவதாகவும்,நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் படம் வித்தியாசமாக உருவாகி வருவதாகவும் பாராட்டினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top