சினிமா

பத்து தல படைத்த மிகப் பெரிய சாதனை.. மகிழ்ச்சியில் சிம்பு

நமது வாழ்க்கையில் எவ்வளவு தோற்றாலும் எவ்வளவு அவமானங்களை சந்தித்தாலும் கடுமையாக உழைத்தால் மீண்டு வர முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் சிம்பு. ஒரு காலத்தில் அடுத்த விஜய், அஜித் என்ற லெவலுக்கு வந்த சிம்பு பிறகு சினிமா மீதான நாட்டம் குறைந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

Advertisement

உடலும் கடுமையாக எடை கூடியது. இதனால் சினிமாவை விட்டு சிம்பு வெளியேறி விடுவார் என அனைவரும் கூறிய நிலையில் மாநாடு படத்தின் மூலம் தரமான கம் பேக்கை கொடுத்தார். தனது உடல் எடையை குறைத்து நல்ல கதைகளை சிம்பு தேர்ந்தெடுக்க தொடங்கினார்.

இந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி அடைந்தது. தற்போது சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. ஒன்று இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் இந்த படமும் தமிழக மக்களிடையே வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இரண்டாவது ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்காக சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார். டிரைலரில் வந்த பின்னணி இசைக்கே ரசிகர்கள் சில்லறைகளை சிதறவிட்டனர். இதே போன்று மூன்றாவது இயக்குனர் ஒபலி கிருஷ்ணா, ஜில்லுனு ஒரு காதலுக்கு பிறகு சில படங்களை அவர் செய்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பத்து தல படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இதேபோன்று நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் மூலம் கம்பேக் கொடுப்பார் என கோலிவுட் வட்டாரம்  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பத்து தல திரைப்படம் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது சிம்பு படத்தில் அதிக தொகைக்கு திரையரங்கு உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமம் ஆகயவை விற்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் படம்  வெளியாவதற்கு முன்பே லாபத்தை பெற்றுள்ளது.

வாத்தி திரைப்படத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. அண்மையில் வெளியான அகிலன் திரைப்படமும் மண்ணை கவ்வியது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் தான் சிம்புவின் பத்து தல ரிலீஸ் ஆகிறது. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பத்து தல வெற்றியை கொடுக்குமா என அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top