Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஹாலிவுட் நடிகர் போல் மாறிய சிம்பு.. வெளியான பத்து தல முதல் விமர்சனம்

ஹாலிவுட் நடிகர் போல் மாறிய சிம்பு.. வெளியான பத்து தல முதல் விமர்சனம்

- Advertisement -

இயக்குனர் உபிலி.  கே கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராகி விட்டது.
வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட இருக்கும் இந்த நிலையில் இத்திரைப்படத்தினுடைய இசைய வெளியிட்டு விழாவை நடத்துவதற்கு படக்குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசை அமைப்பில் திரைப்படத்தின் உடைய பாடல்கள் மிக சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த நம்ம சத்தம், நினைவிருக்கா போன்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெயரும் வரவேற்பை பெற்று தற்பொழுது இணையத்தின் வைரலாக உள்ளது.

- Advertisement -

வருகின்ற மார்ச் 17ஆம் தேதி இந்த திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவில் கலந்த ஒரு மாதத்திற்கு மேல் இருந்த நடிகர் சிம்பு தற்பொழுது வருகை தந்திருக்கிறார். தன்னுடைய உடலை குறைப்பதற்காகவும், பல்வேறு கலைகளை கற்க நடிகர் சிம்பு தாய்லாந்து சென்றிருந்தாக  தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.

- Advertisement -

இதனால் நடிகர் சிம்பு தற்பொழுது எப்படி இருக்க போகிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்து வரும் இந்த நிலையில் நடிகர் சிம்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.நடிகர் சிம்பு பார்ப்பதற்கு ஹாலிவுட் ஆக்டரை போன்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இதற்குப் பிறகு அவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தனஜெயன் பார்த்திருக்கிறார். இத்திரைப்படம் நல்ல முறையில் வந்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வெற்றியும் பெறும் என்று கூறி தன்னுடைய முதல் விமர்சனத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் தனஜெயன்

பத்துதல திரைப்படத்தின் உடைய முதல் விமர்சனமே நல்ல முறையில் அமைந்திருக்கிறது என்பதாலே திரைப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Most Popular