Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய், அஜித் ஒரம் போங்க.. இது எஸ்டிஆருடைய நேரம்.. பட்டையை கிளப்பும் பத்து தல 22...

விஜய், அஜித் ஒரம் போங்க.. இது எஸ்டிஆருடைய நேரம்.. பட்டையை கிளப்பும் பத்து தல 22 வினாடி வீடியோ

- Advertisement -

இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும்  பத்து தல திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் முன்பு வந்த அப்டேட்ஸ் இன் படி சிம்புவின் பிறந்த நாளான நாளை பிப்ரவரி 3ஆம் தேதி பத்து தல திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது பிப்ரவரி இரண்டாம் தேதி ஆன இன்று  நாளை வர இருக்கும் ஃபாஸ்ட் சிங்கிளின் ஒரு 22 வினாடிகள் கொண்ட நம்ம சத்தம் என்ற என்ற வீடியோவை பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.அது நடிகர் சிம்பு இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசைக்கு நடனம் ஆடுகிறார். பார்ப்பதற்கே சம மாசாக இருக்கிறது என்று தோன்றும் அளவிற்கு அந்தப் பாடலின் பின்னணி இசை அமைந்திருக்கிறது.

- Advertisement -

தீ பந்தங்களை விளக்குகளாக எரிய விட்டு அதற்கு முன்பு நின்று நடிகர் சிம்பு ஆடும் நடனம் பார்ப்பதற்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சிம்பு போடும் அந்த ஸ்டெப் இந்த திரைப்படத்தின் உடைய சிக்னேச்சர் ஸ்டெப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. இனி இணையதளங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் இந்த ஸ்டெப்பை ரீல்ஸ் போட்டு ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இந்த படக்குளவினர் இந்த கிளிம்சை வெளியிட்டதற்கு காரணமே நாளை வெளியிட இருக்கும் அந்த ஃபர்ஸ்ட் சிங்கிளினுடைய ஆர்வத்தை தூண்டுவதற்காக தான் இருக்கும். அவர்களின் நோக்கமும் நிறைவேறியது. எஸ் டி ஆரின் ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளோடு இந்து திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

அதேபோன்று இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது இசை புயல் ஏ ஆர் ரகுமான் என்பதால் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மீதும், ரசிகர்கள் பெருமளவில் நம்பிக்கை வைத்து காத்திருக்கிறார்கள். நிச்சயமாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular