2022 ஆம் ஆண்டு முடியும் சமயத்தில் நடிகர் சிம்புவின் பத்து தல பட குழு காமெடி ஒன்றை செய்திருக்கிறது. புத்தாண்டு தொடக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலில் பத்துதல பட குழு ஈடுபட்டிருக்கலாம் என்றும் விமர்சனம் எழுதுள்ளது. காரணம் பத்துதல படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று பட குழு நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டது.
இதனால் சிம்பு ரசிகர்கள் காலையில் பல் தேய்த்து ,குளித்து முடித்து , மொபைல் போனில் நூறு சதவீதம் சார்ஜர் ஏற்றிக்கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ வழக்கம் போல் பெரிய ஏமாற்றம் தான். படக்குழு வெளியிட்ட போஸ்டரில் மார்ச் 30ஆம் தேதி பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷயமே சிம்புவின் புகைப்படத்தில் தான் இருக்கிறது.
சிம்புவை டெரர் ஆக காட்டுகிறேன் என நினைத்து தவறான லைட்டிங் மற்றும் கேமரா ஆங்கிள் வைத்ததன் காரணமாக சிம்பு படு காமெடியாக தெரிந்தார்.சிம்புவால் படம் சூட்டிங் தாமதமானதாக சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பகைத்தீர்க்கும் விதமாக படக்குழு இப்படி செய்து விட்டதோ என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். தீ இது தளபதி திரைப்பட பாடலில் சிம்பு செம மாசாக இருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அவரை வைத்து காமெடி செய்து இருக்கிறார்கள் என்று சிம்பு ரசிகர்களே குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒரே வரியில் இந்த போஸ்டர் குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஜிகர்தண்டா படத்தில் மிரட்டலான ரவுடியை காமெடி நடிகனாக காட்டியது போல் மாசான சிம்புவை இந்த ஒரே போஸ்டரின் மூலம் காமெடி நடிகர் போல் பட குழுவினர் மாற்றிவிட்டார்கள். தயவுசெய்து சிம்புவுடன் ஏதாவது பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஸ்டுடியோ கிரீன் என்று பலரும் கமெண்ட்களை அள்ளி தெளிப்பதை காண முடிகிறது.