Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபத்து தல ரிலீஸ் தேதி எப்போது? சிம்பு ரசிகர்கள் செம மகிழ்ச்சி

பத்து தல ரிலீஸ் தேதி எப்போது? சிம்பு ரசிகர்கள் செம மகிழ்ச்சி

- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி தற்பொழுது லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் முன்னணி நடிகர் எஸ் டி ஆர். இவருக்கு படம் வெற்றியடைந்தாலும் சரி வெற்றியடையாவிட்டாலும் சரி இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே எப்பொழுதும் இருப்பதுண்டு.2021 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் எஸ் டிஆருக்கு மேலும் பல ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

தொடர்ந்து நடிகர் சிம்பு 2022 ஆம் ஆண்டு வெந்து தணிந்தது காடு என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடித்திருந்தார்.ஆனால் இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதிலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகமும் விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது நடிகர் சிம்பு நடித்து பத்து தலை திரைப்படம் திரையரங்குகளில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தினுடைய டீசர் 10 மாதங்களுக்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி  ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள்.

- Advertisement -

மார்ச் 10ஆம் தேதி நடிகர் சிம்புவின் உடைய பிறந்தநாள் என்பதால் அன்றைய தேதியை பத்து தலை திரைப்படத்தின் உடைய வெளியீட்டு நாளாக தேர்வு செய்து இருக்கிறார்கள். அதிலும் ஹாப்பி பர்த்டே ஏ ஜி ஆர் என்று குறிப்பிடப்பட்டு பிறகு எஸ் டி ஆர் என்று மாற்றப்பட்டது. இதையே ஒரு குறிப்பு போன்று அந்த டீசரில் வெளியிட்டிருந்தார்கள்.

அதேபோல் தற்பொழுது நடிகர் சிம்புவின் உடைய பிறந்தநாள் அன்று பத்து தலை திரைப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.  ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய,  இயக்குனர் ஒப்லி என் கிருஷ்ணன் மற்றும் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தினுடைய டீசரிலேயே எஸ் டி ஆர் க்கு மாஸான என்ட்ரியும் கெட்டப்பும் இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Most Popular