சிலம்பரசனின் 47வது மற்றும் ரீமேக் திரைப்படமான பத்து தல அனைத்து முன் வேலைகளும் முடிக்கப்பட்டு ரீலீசுக்கு தயாராகி இருக்கிறது. சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி நடிகர்களாக நடிக்கும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
படத்தின் இசை வெளியீட்டு மற்றும் டிரெய்லர் லாஞ்ச் விழா சென்ற சனிக்கிழமை நேரு அரங்கக்த்தில் பிரம்மாண்டமாக நடந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் சிம்பு பழைய வைபில் நடனமெல்லாம் ஆடி விழாவை சிறப்பித்தார். முழுக்க முழுக்க ரீமேக்காக இல்லாமல் கதைக் கருவை வைத்து இயக்குனர் கிருஷ்ணா தன் பாணியில் எடுத்துள்ளார் என்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.
டிரைலரில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் மோதல் தரமாக இருந்தது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மானின் பி.ஜி.எம் இன்னும் ஃபயர், படத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம். படக்குழு தற்போது புரொமோஷன் வேளைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ரீலீசுக்கு அடுத்த நாள் வெற்றிமாறனின் விடுதலை எனும் மிகப் பெரிய படத்தை தாண்டி வெல்ல கூடுதல் விளம்பரம் நிச்சயம் தேவை.
பத்து படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
பத்து தல படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் எனும் ரசிகர்களுக்கு இனிப்பு ஊட்டும் செய்து வந்துள்ளது. அண்மையில் திரைப்படங்களில் நீளம் இரண்டே முக்கா நேரத்திற்கு மேல் இருந்தாலே பல பார்வையாளர்கள் ரீலீசுக்கு முன்பே ஸ்லோ திரைப்பட என முத்திரை கொடுத்து விடுகின்றனர். நீண்ட நேரம் கொண்டும் சிறப்பாக செய்யப்பட்ட படங்கள் சிலவன மட்டுமே. உதாரணம் விக்ரம்.
மோசமான திரைப்படங்களுக்கு வலிமை, வாரிசு, கோப்ரா என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தல் இது பத்து தல படத்திற்கு துவக்க வெற்றி. சிம்புவின் முந்தைய திரைப்படமான வெந்து தணிந்தது காடு சுமாரான விமர்சனங்கள் பெற்றாலும் நீண்ட நேரம் ஒரு பெரிய குறையாகவே பேசப்பட்டது. இப்படத்தில் சிம்புவுக்கு அந்த பிரச்சனை இல்லை. இருப்பினும் படத்தின் முழு விமர்சனம் ரீலீஸ் அன்று தான் தெரியும்.