தோல்வியை கண்டு ஒருபோதும் பின் தங்கிடாத ஒரே நடிகன் என்றால் அது நடிகர் எஸ் டி ஆர் தான். அவருடைய அந்த முயற்சியால் தான் இன்று அந்த தோல்விகள் எல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் எஸ்டிஆருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இன்றி இருந்தது.
ஆனால் அவர் அந்த நாட்களை வீணாக கழிக்காமல் இதையும் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைத்து அதை பயன்படுத்தி அவர் தன்னுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். அதாவது தன் வேலையில் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றார் இதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் எஸ் டி ஆர் க்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. படத்தில் நடிக்காமல் ஓய்வெடுத்த காலத்திலேயே அவருக்கென்று இருந்த ரசிகர்கள் ஒருபோதும் அவரை நீங்கி வேறு ஒருவரை ரசிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் தான் எஸ்டிஆர் இன் ரசிகர்கள். மீண்டும் அவரை திரையில் கண்டதும் சொல்லவா வேண்டும் தலையில் தூக்கி கொண்டாட இன்னும் பல கூட்டம் உருவாகியது.
மாநாடு திரைப்படம் நடிகர் எஸ் டி ஆர் க்கு மட்டுமல்ல இயக்குனர் வெங்கட் பிரதோஷம் ஒரு புதிய திருப்பத்தை தந்தது.இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் எஸ் டி ஆர் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் பத்து தலை என்ற திரைப்படத்தை நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இன்னும் இந்த திரைப்படத்திற்கு கூடுதலாக வெற்றியை சேர்க்கும் வகையில் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் இசைக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் பாடலும் பாடியிருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.மேலும் இந்தத் திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரவர்களை வெளியாகும் என்று தகவலும் வெளியாகி இருக்கிறது.
மேலும் வருகின்ற பிப்ரவரி மூன்றாம் தேதி எஸ் டி ஆரின் பிறந்த நாளை ஒட்டி அதற்கு முந்திய நாளான பிப்ரவரி இரண்டாம் தேதி பத்து தலை திரைப்படத்தின் உடைய முதல் சிங்கள் வெளியாக இருக்கிறது என்ற தகவலும் படக்குழுவின் அவர் வெளியிட்டு இருக்கிறார்கள்.