Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாராக்கி பாய்லாம் ஓரமா போங்க.. இது ஏஜிஆர் எண்டிரி! மீண்டும் மிரட்டும் சிம்பு, ரஹ்மான் கூட்டணி

ராக்கி பாய்லாம் ஓரமா போங்க.. இது ஏஜிஆர் எண்டிரி! மீண்டும் மிரட்டும் சிம்பு, ரஹ்மான் கூட்டணி

- Advertisement -

பொதுவாக மனிதர்களுக்கு பயிற்சியின் மூலம் திறமைகள் வளரும் ஆனால் சிலர் மட்டுமே திறமை உடனே பிறந்திருப்பார்கள் அப்படிப்பட்ட வரிசையில் வந்தவர்கள் தான் ஏ ஆர் ரகுமானும் எஸ் டி ஆர் எனப்படும் சிலம்பரசன் ஆவார்கள்.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர். எனினும் சில சர்ச்சைகளில் சிக்கி மோசமான கதை தேர்வுகள் மற்றும் ஒழுக்கமின்மை காரணத்தினால் சினிமாவில் தன்னுடைய இடத்தை இழந்தார்.

- Advertisement -

எனினும் தாம் விட்ட இடத்தை தற்போது மீண்டும் பிடிப்பதற்காக களமிறங்கி இருக்கிறார் சிம்பு. தனது உடல் எடையை குறைத்து மாநாடு மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்த சிம்பு, வெந்து தணிந்தது காடு படம் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் படத்தை சிம்பு கொடுக்க உள்ளார். சிம்பு, கௌதம் கார்த்திக், ஏ ஆர் ரகுமான் ஆகியோர் பணியாற்றிய பத்து தல திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

இதில் சிம்பு மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார். ஒரு தாதா எப்படி இருப்பாரோ அதனை ரசிகர்கள் கண் முன் நிறுத்தி இருக்கிறார். கௌதம் மேனன் சிம்புவுக்கு வில்லனாக வருகிறார். அவரும் கெத்தாக காட்சியளிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் காட்சி அமைப்புகள் எல்லாம் ட்ரைலரில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்திற்கு முக்கிய கதாநாயகனாக இருக்கப் போவது நமது ஏ ஆர் ரகுமான் தான். அவருடைய இசை இந்த படத்திற்கு பலத்தை சேர்த்து உள்ளது. இந்த ட்ரெய்லரிலே மனுஷன் பிச்சு மேய்ந்திருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒபேலி கிருஷ்ணாவுக்கு பத்து தல திரைப்படம் பெரிய கம் பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கன்னடத்தில் ஹிட்டான திரைப்படம் என்பதால் தமிழிலும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என அவர்களது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Most Popular