தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.2005 ஆம் ஆண்டு சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதற்குப் பின்பு அவர் நடிகனாக இயக்குனராக தயாரிப்பாளராக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பல அவதாரங்களில் தமிழ் சினிமாவில் இயங்கி இருக்கிறார்.
அதிலும் 2015 ஆம் ஆண்டு அவர் இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. மிக சிறந்த கதை களத்தைக் கொண்ட அந்த திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிறகு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் வந்தார். ஆனால் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மீதுதான் எல்லாம் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 19 ஆம் தேதி நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.
தமிழ் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் தெலுங்கில் பிச்சாகாடு டு என்ற பெயரில் இத்திரை திரைப்படம் வெளியிடப்பட்டு பெருமளவில் வரவேற்கப்பட்டும் வருகிறது. 13 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது தெலுங்கில் கடந்த இரண்டு நாட்களிலேயே எட்டு கோடி ரூபாய் அளவில் பெற்றுள்ளது மேலும் இனி வரக்கூடிய நாட்களில் எல்லாம் இத்திரைப்படம் மிகுந்த லாபத்தை ஈட்டும் என்ற தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது.
அசுர வேகத்தில் வெற்றி அடைந்து வரும் இந்த திரைப்படம் தெலுங்கில் சாதனை புரிந்துள்ளது.
இதன் மூலம் நடிகர் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்றும் தோன்றுகிறது. மேலும் தன்னுடைய அடுத்த அடுத்த திரைப்படங்களை தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கப் போகிறாரா என்று கேள்வியும் தோன்றுகிறது. பிச்சைக்காரன் முதல் பாகம் தெலுங்கில் மட்டும் 48 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது