Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாபிச்சைக்காரன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. படம் வெளியாகும் முன்பே பிளாக்பஸ்டர் போஸ்டரா?

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. படம் வெளியாகும் முன்பே பிளாக்பஸ்டர் போஸ்டரா?

- Advertisement -

இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி திரைப்பட வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பிச்சைக்காரன் 2 தான். இந்த படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த விஜய் ஆண்டனி படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய பல பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

படம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்படுவதால் தமக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் விஜய் ஆண்டனி வேதனை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஒரு வழியாக பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி திரைக்கு வரும் என தற்போது போஸ்டர் மூலம் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

பொதுவாக படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் இல்லை இரண்டாவது நாள் தான் பிளாக்பஸ்டர் என்று போஸ்டரை ஓட்டுவார்கள்.அதுவே தவறு என்று ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிளாக்பஸ்டர் என போஸ்டரில் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் விஜய் ஆண்டனி பாவம்யா என்று பல ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மூளையை வேறு உடலுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்து அவர்கள் உடலில் நாம் வாழும் மருத்துவ தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகம் ஓடியதற்கு முக்கிய காரணமே தாய் பாசம் தான். இதனால் இரண்டாவது பாகம் வெற்றி பெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தப் படத்திற்கு தமிழகத்திற்கு வெளியிட திரைப்பட உரிமை தொகையாக 18 கோடி ரூபாயை விஜய் ஆண்டனி கேட்பதாகவும் அது மிகவும் அதிகம் என பலரும் தயக்கப்பட வடுவதாகும் கூறப்படுகிறது.

Most Popular