இவ்வாண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பல முறை மோதுகின்றன. ஜனவரி மாதத்தில் 8 வருடங்களுக்குப் பின் அஜித் – விஜய்யின் மோதலைக் கண்டோம். பிப்ரவரி மாதம் அண்ணன் செல்வராகவன் – தம்பி தனுஷ் மோதினர். மார்ச் மாத இறுதியில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சிம்புவின் பத்து தல படமும் அவருக்கு இணையான பெருமைக் கொண்ட வெற்றிமாறனின் விடுதலை படமும் வருகிறது. அது தவிர்த்து நானியின் தசரா திரைப்படமும் வெளியாகிறது.
அடுத்தடுத்த மாதங்களில் யார் யார் மோதுகின்றனர் என இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை ஆனால் நிறைய பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன். அப்பட்டியலில் பொன்னியின் செல்வன் 2, ஜவான், ஜெயிலர், லியோ, இந்தியன் 2, கேப்டன் மில்லர், மாவீரன், ஜப்பான் அடங்கும். இந்த வருடத்திற்கு அடுத்து வரவிருக்கும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இவையே.
இன்னும் சிலரின் படங்ககள் ஷூட்டிங்கில் இருக்கின்றன. மகிழ் திருமேனி இயக்கும் அஜித் 62 படத்தின் அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த செய்திகள் படி என்னவென்றால் படக்குழு அப்படத்தை விரைந்து முடிக்கவுள்ளனராம். அதோடு மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சூர்யா 42, சிம்புவின் 48வது படம், சிவகார்த்திகேயன் – தேசிங்கு பெரியசாமி படம் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
பண்டிகை தினங்களில் திரைப்படங்கள் வெளியாவதில் ஒரு பெரிய பிளஸ் உள்ளது. திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பொழுதுபோக்குக்கு குடும்பங்கள் தியேட்டருக்கு விரைந்து வருகின்றனர். அதனால் தயாரிப்பு நிறுவனங்கள் தந்திரமாக படத்தின் அறிவிப்பின் போதே ரீலீஸ் தேதியும் குறிப்பிட்டு பண்டிகை தேதிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு நான்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றது. அவை பிரபாசின் பிராஜட்க் கே, த்ரிவிக்ரம் இயக்கும் மகேஷ் பாபுவின் 28வது படம், ஷங்கர் இயக்கும் ராம்சரணின் 15வது படம். டோலிவுட்டை சேர்த்த இப்படங்களுடன் கோலிவுட்டின் சூர்யா 42 படமும் வரவிருக்கிறது.
மேலும் அஜித் 62 படக்குழுவும் பொங்கல் ரிலீஸை குறி வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கு திரையிட மும்முரமாக இருக்கிறது, அதனால் அஜித் 62 படம் பொங்கலுக்கு வெளியாகும். இரண்டு பண்டிகைகளில் இரண்டு பெரிய படங்கள் வெளியிட லைகா திட்டமிட்டுள்ளது.