Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வனுக்கு எதிர்பார்ப்பு இல்லையா? இங்க பாரு கண்ணா!

பொன்னியின் செல்வனுக்கு எதிர்பார்ப்பு இல்லையா? இங்க பாரு கண்ணா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பலரும் படமாக்க வேண்டும் என நினைத்து பாதியில் கைவிட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தக் காவிய திரைப்படத்தை படமாக்குவது என்பது முடியாத காரியம் என எம்ஜிஆர் முதல் கமல் வரை நினைத்து கைவிட்டனர். ஆனால் இயக்குனர் மணிரத்தினம் இதனை வெற்றி கரமாக செய்து காட்டியது மட்டுமல்லாமல், முதல் பாகத்தின் மூலம் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையை மையமாக வைத்து திரையரங்குகளுக்கு வருகிறது. எனினும் முதல் பாகத்திற்கு எழுந்த எதிர்பார்ப்பு தற்போது இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். காரணம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது தான் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

- Advertisement -

இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் பாகத்தை போல் வெற்றி பெறாது என்ற கருத்தாக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதனை அனைத்தும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அமெரிக்காவில் திரையிடப்படுகிறது.

- Advertisement -

இன்னும் படம் ரிலீஸ் ஆக 11 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வரை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் அமெரிக்காவில் மட்டும் வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இத்தகைய சாதனையை பொன்னியின் செல்வன் 2 படைத்திருப்பதால் தமிழகத்திலும் முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகமும் சாதனை படைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரமலான் நோன்பு காலம் முடிவடைந்த பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 ஆகும். மேலும் கோடை விடுமுறை என்பதால் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளில் படத்தை பார்ப்பார்கள். இதனால் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் வசூலில் சாதிக்கும் என்று பட குழுவினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Most Popular