Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியன் செல்வன் 2 பாடல் வெளியிட்டு விழா.. பங்கேற்கும் நட்சத்திர பட்டியல் இதோ!

பொன்னியன் செல்வன் 2 பாடல் வெளியிட்டு விழா.. பங்கேற்கும் நட்சத்திர பட்டியல் இதோ!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றது பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகம். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முதல் பாகத்திலேயே தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்து விட்டார். இதனால் இரண்டாவது பாகம் வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவருக்கு லாபமாக தான் சேரும். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் இசை வெளியீட்டு விழா தான்.

- Advertisement -

அதில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பேசிய பேச்சு அனைத்தும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாகத்திற்கும் அதே போல் பிளஸ் ஆக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் படக்குழு முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

அந்த பேச்சை உடைக்கும் முயற்சியில் பட குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் என்னென்ன நட்சத்திரங்கள் பங்கே இருக்கிறார்கள் என்று பார்ப்போம். கடந்த நிகழ்ச்சி போல இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆனால் ரஜினி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதேபோன்று நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது .

ஆனால் அவரும் வருவது போல் தெரியவில்லை. அடுத்த பெரிய நட்சத்திரம் ஆக நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இயக்குனர் மணிரத்தினம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ,பார்த்திபன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதேபோன்று நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரும் இன்று சென்னை வர உள்ளனர். முந்தைய நிகழ்ச்சிகள் ஜெயராமின் மிமிக்ரி மிகவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் இன்று அவர் யாரை மிமிக்கிரி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Most Popular