Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் 2 பிளாக்பஸ்டர்! 3 நாள் வசூல் எவ்வளவு? லைகாக்கு லாபமா? நஷ்டமா?

பொன்னியின் செல்வன் 2 பிளாக்பஸ்டர்! 3 நாள் வசூல் எவ்வளவு? லைகாக்கு லாபமா? நஷ்டமா?

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்துக்கு எதிர்பார்ப்பு இல்லை என்று கருதப்பட்ட நிலையில், முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாளும் இரண்டாவது நாள் வசூலை விட மூன்றாவது நாளும் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் ரசிகர்கள் இந்த படத்தை மீண்டும் வெற்றி படமாக மாற்றி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் மூன்று நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 150 கோடி ரூபாயை வசூல் சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் இந்திய ரூபாய் மதிப்பில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஏழரை கோடி ரூபாய் அளவுக்கு பொன்னியின் செல்வன் 2 வசூல் செய்திருக்கிறது.

- Advertisement -

தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் அளவுக்கு பொன்னியின் செல்வன் வசூல் செய்திருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஏற்கனவே முதல் பாகம் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அதே பாணியில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

- Advertisement -

இன்னும் இரண்டு வாதத்திற்கு பெரிய படம் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் பொன்னியின் செல்வன் டூ அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரும் செலவில் எடுத்துள்ள லைக்கா நிறுவனத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

முதல் பாகத்தின் மூலமே லைக்கா 10 சதவீதம் வரை லாபம் பார்த்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன. இதனால் இரண்டாவது பாகம் வசூல் செய்யும் படம் எல்லாம் அவர்களுக்கு லாபத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மணிரத்தினம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருக்கிறார். எனினும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இரண்டாவது பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular