சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது?

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட கால கனவு கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் நிஜமானது. நடிகர் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன் சரத்குமார் ஜெயராம் நடிகை திரிஷா ஐஸ்வர்யா ராய் போன்ற நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.  பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

Advertisement

முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் அவருடைய இசையில் ஒவ்வொரு பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈற்றிய திரைப்படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்தது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தினுடைய இரண்டாவது பாகம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்று தகவல் அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகு வேறு எந்த தகவலும் இந்த திரைப்படத்தைப் பற்றி சில நாள் வராமல் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு தகவலை  வெளியிட்டிருக்கிறார்கள். காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி இந்தத் திரைப்படத்திலிருந்து ஒரு காதல் பாடல்  வெளியிட இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

Advertisement

இந்தத் பாடல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பொன்னியின் செல்வன் என்று கூறப்படுகிற அருள்மொழி வர்மன் மற்றும் வானதியில் ஆகியோரின் காதல் பாடல் ஆகும்.

அதனால் இந்த இந்த வருடம் காதலர்கள் தங்கள் காதலை சங்க காலத்து முறையில் வெளிப்படுத்தப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசை புயல் ஏ ஆர் ரகுமான் இனி இசையில் இந்தப் பாடலும் நிச்சயம் வெற்றி அடையும் .செல்வன் பாகம் 1 வானதி மற்றும் அருண்மொழிவர்மனின் காதல் காட்சிகள் என்று பெருமலர்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் தற்பொழுது வந்திருக்கும் தகவலின்படி பொன்னியின் செல்வின் பாகம் இரண்டில் அவ்வாறான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அரண்மொழிவர்மனை வானதியைப் போல பூங்குழலியும் காதலிக்கிறாள் என்றுதான் பாகம் ஒன்றின் கதைக்களம் அமைந்திருக்கும். ஆனால் வானதியோடு காதல் பாடலா என்ற பல கேள்விகளுக்கு பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படம் பதில் கூற காத்திருக்கிறது. அவற்றைக் காண்பதற்கு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு இதற்கான விடை தெரிந்திருக்கும். ஆனால் தெரியாதவர்களுக்கு இது சுவாரஸ்யமான எதிர்பார்ப்புகளாக இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top