2022 ஆம் ஆண்டு அதிக வசூல் சாதனையை படைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெற்றது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 220 கோடி ரூபாய் வசூலை செய்தது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் என்ற மைல் கல்லை தொட்டது.
இந்த நிலையில் பொன்னின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு முதல் பாகம் போல் எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை. இதற்கு காரணம் பட குழு போதிய அளவில் விளம்பரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல் பாகத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக பல்வேறு வீடியோக்கள், ப்ரோமோக்கள் நடிகர்களின் பேட்டிகள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் அளவுக்கு இருந்தது. ஆனால் இம்முறை எதையும் பட குழு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில் படத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் இந்தியா முழுவதும் பயணம் செய்ய உள்ளனர். அதற்கான அட்டவணை தற்போது தயாராகி உள்ளது. அதன்படி 16ஆம் தேதி கோவையிலும், 17ஆம் தேதி சென்னையிலும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
அதேபோன்று ஹிந்தி மார்க்கெட்டை மையமாக வைத்து ஏப்ரல் 18ஆம் தேதி டெல்லியிலும், கேரளா மார்க்கெட்டை குறிவைத்து ஏப்ரல் 20ஆம் தேதி கொச்சியிலும் பொன்னியின் செல்வன் பட குழுவினர் செல்ல உள்ளனர். ஏப்ரல் 22ஆம் தேதி பெங்களூரிலும் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாதிலும் பொன்னியின் செல்வன் குழுவினர் படத்திற்கான விளம்பரப் பணிகளை செய்ய உள்ளனர்.
இதேபோன்று ஏப்ரல் 25ஆம் தேதி மும்பையிலும் ஏப்ரல் 26ஆம் தேதி திருச்சியிலும் பொன்னின் செல்வன் பட குழுவில் போக உள்ளனர். இந்த எட்டு நாளில் ஏதேனும் படக்குழுவினர் செய்தால் மட்டுமே அது ரசிகர்களை கவரும் இல்லையெனில் இரண்டாவது பாகம் பெரிய அளவில் வசூல் பெறாது.