Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியன் செல்வன் 2 முதல் பாடல் ரிலீஸ் எப்போது? மொத்தம் எத்தனை பாடல்கள்?

பொன்னியன் செல்வன் 2 முதல் பாடல் ரிலீஸ் எப்போது? மொத்தம் எத்தனை பாடல்கள்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம். தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெற்றிருந்தது.

இந்தப் படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார். பாடலும் பெரும் அளவில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. சில பாடல்கள் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்ததும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளது.

- Advertisement -

ஆனால் இதுவரை பாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என ரசிகர்கள் தயக்கத்தில் இருந்தனர். தற்போது அதற்கான அப்டேட் கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாட்டின் வெளியீடு இன்னும் ஒரு வாரத்தில் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நான்கு பெரிய பாடல்களும் இரண்டு சிறிய பாடல்களும் என மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட சில இசைகள் இரண்டாவது பாகத்திலும் இருக்கும் என தெரிகிறது. எனினும் படத்தின் ரிலீஸ்க்கு 43 நாட்கள் தான் உள்ள நிலையில் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் பட குழு வெளியிடவில்லை. இதனால் படத்துக்கான ப்ரோமோஷன் வேலை ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular