கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்த்து பெரும் அளவில் இருந்து வந்தது. ஏனெனில் இது ஒரு நாவலாக இருக்கும்பொழுது பல ரசிகர்களை பெற்றது.
இயக்குனர் மணிரத்தினம் அதை படமாக்க கனவு கண்டார். அதை எப்பொழுது திரையில் பார்ப்போம் என்ற கனவில் பல ரசிகர்கள் இருந்து வந்தார்கள். அந்த கனவு தற்பொழுது இரண்டு பாகங்களாக படமாக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வந்தது.
முதல் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் மிக சிறப்பாக அமைந்திருந்தது மட்டுமல்லாமல் பெருமளவில் வரவேற்பையும் பெற்று 500 கோடி ரூபாய் வசூலை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியும் அடைந்தது.
இதனிடையே தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தினுடைய இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைக்கப்பட்ட வரவேற்பையினால் இரண்டாம் பாகம் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்கள் கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் எட்டிய அளவிற்கு இத்திரைப்படம் வசூலை இன்னும் எட்டவில்லை.
மேலும் இத்திரைப்படத்திலும் நிறைய மாற்றங்கள் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இது திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓ டி டி இல் வெளியிடப்பட இருக்கிறது.
ஆனால் தற்பொழுது அமேசான் பிரைமில் இத்திரைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு இதற்கு முன்பே அமேசான் பிரைமில் மெம்பர்ஷிப்பில் இருந்தால் கூட பொன்னின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காகவே கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. ஆனால் வருகின்ற ஜூன் 3ஆம் தேதியிலிருந்து அமேசான் பிரைமில் திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.