பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாவது பாகம் இம்மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாகிறது. இதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படத்திற்கான எந்த ப்ரமோஷன் பணிகளும் தொடங்கப்படவில்லை. ட்ரெய்லர் அறிமுகம் நிகழ்ச்சி மட்டும் தான் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வழங்கப்படவில்லை.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வருமா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான அப்டேட்டுகள் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ்,சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களின் அப்டேட்களை கேட்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட இந்த தேதிகள் பயன்படுத்தப்படும். இந்த 12 நாட்களில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான நகரங்களில் பொன்னியின் செல்வன் டு பட குழு சென்று மக்களை சந்திக்க உள்ளார்கள். மேலும் அந்தந்த ஊர் நிகழ்ச்சியில் பங்கேற்று பொன்னியின் செல்வன் இரண்டு படத்தை விளம்பரம் செய்ய உள்ளார்கள்.
சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் மும்பை டெல்லி போன்ற ஊர்களுக்கும் நேரம் இருந்தால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் பட குழு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் அடுத்தடுத்த ப்ரமோஷன் பணிகள் இனி பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் மீது எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்த முடியும் என தயாரிப்பாளர் குழு நம்புகிறது.